பதிவு செய்த நாள்
10 அக்2016
04:47

மும்பை : உணவு மற்றும் பானங்கள் பிரிவில் இயங்கி வரும், யெல்லோ டை ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம், மேலும் 8 முதல் 10 பிராண்டுகளில், உணவு பொருட்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கரண் டானா கூறியதாவது: கடந்த ஆண்டுதான் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தோம். இந்த ஆண்டில் அமெரிக்க பிராண்டான ஜி.பி.சி., எனும் ஜென்யூன் பிராஸ்டர் சிக்கனை அறிமுகம் செய்தோம். மேலும், மூன்று இந்திய பிராண்டு உணவுகளையும் இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்ய இருக்கிறோம். மேலும், இங்கிலாந்தை சேர்ந்த இரண்டு நிறுவனங்களிடமும், மெக்ஸிகோவை சேர்ந்த ஒரு நிறுவனத்திடமும் அவர்களின் தயாரிப்பை இந்தியாவில் அறிமுகம் செய்ய பேசி வருகிறோம். இதற்காக 50 கோடி ரூபாயை முலதன செலவுக்காக வைத்திருக்கிறோம். சி.பி.ஜி., உணவகத்தை இந்தியாவில் 3 இடங்களில் துவக்கி இருக்கிறோம். 2018 – 2019ம் ஆண்டில் நாடெங்கிலும் 200 சி.பி.ஜி., உணவகத்தை துவக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|