பதிவு செய்த நாள்
10 அக்2016
04:47

மும்பை : ‘இந்தியாவில் அலுமினியம் பயன்பாடு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 53 லட்சம் டன்னாக அதிகரிக்கும்’ என, ‘கிரிசில்’ நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன் விபரம்:கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், இந்தியாவின் அலுமினியம் பயன்பாடு, 33 லட்சம் டன்னாக இருந்தது. நாட்டில், மின்சாரம், வாகனம் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. மத்திய அரசின், ‘இந்தியாவில் தயாரிப்போம், ஸ்மார்ட் சிட்டி, அனைவருக்கும் வீடு’ போன்ற திட்டங்களால், அடிப்படை கட்டமைப்பு பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்துடன், கிராமப்புற மின் திட்டம், சரக்கு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் திட்டம் போன்ற பல திட்டங்களால், அலுமினியம் மற்றும் அலுமினியப் பொருட் களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நாட்டின் அலுமினியம் பயன்பாடு, ஆண்டுக்கு சராசரியாக, 9 – 11 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு, 2020–21ல், 53 லட்சம் டன்னாக உயரும்.
தாமிரத்தை விட, அலுமினியம் விலை குறைவாக உள்ளதால், அதன் பயன்பாடு, மின்துறையில் அதிகரித்துள்ளது. அடுத்த, ஐந்து ஆண்டுகளில், நாட்டில் மின் வினியோகம் மற்றும் பகிர்மானம் துறையில், மிகப் பெரிய அளவில் விரிவாக்க திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இத்துறையில், மத்திய, மாநில அரசுகள், 4.30 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. அதனால், மின்துறையில், அலுமினியம் பயன்பாடு, குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|