பதிவு செய்த நாள்
10 அக்2016
04:48

புதுடில்லி : பாரசீக வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைன், எண்ணெய் வளத்தில் சிறந்து விளங்குகிறது. இந்நாடு, பல்வேறு துறைகளில் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இது தொடர்பாக, பஹ்ரைன் பொருளாதார மேம்பாட்டு வாரியமான, பி.இ.டி.பி.,யை சேர்ந்த குழுவினர், இந்தியா வந்து, முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தினர்.
‘ஸ்டார்ட் அப்’இது குறித்து, பி.இ.டி.பி., நிர்வாக இயக்குனர், சைமன் கல்பின் கூறியதாவது: பஹ்ரைனில், சுற்றுலா துறையில் ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. அதனால், இந்திய ஓட்டல் நிறுவனங்கள், பஹ்ரைனில் ஓட்டல் வர்த்தகத்தில் ஈடுபடலாம். அதுபோல நிதிச் சேவைகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ‘டிஜிட்டல்’ பணப் பரிவர்த்தனை சார்ந்த, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு, பஹ்ரைனில், மிகச் சிறந்த வர்த்தக வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்தியாவுடன், நெருக்கமான பொருளாதார உறவை ஏற்படுத்திக் கொள்ள, பஹ்ரைன் ஆர்வமாக உள்ளது. ஏராளமான அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு, பஹ்ரைன் அரசு நிதியுதவி அளிக்கிறது. இந்த வாய்ப்பை, இந்திய பொறியியல் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களை மேம்படுத்துவது, விமான நிலையங்களின் விரிவாக்கம், புதிய ரயில்வே திட்டங்கள் ஆகியவற்றில், இந்திய நிறுவனங்கள் பங்கேற்கலாம்.
வளைகுடா கூட்டுறவு குழுவைச் சேர்ந்த ஆறு நாடுகளுக்கு, நுழைவாயிலாக பஹ்ரைன் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் மத்தியில் அமைந்திருப்பது, பஹ்ரைனுக்கு கூடுதல் சிறப்பு. அதனால், 30 நிமிட பயணத்தில், 25 கி.மீ., துாரம் உள்ள சவூதி அரேபியாவிற்கு செல்லலாம். ஏராளமான நிறுவனங்கள், பஹ்ரைனை மையமாக வைத்து, சவூதி அரேபியா மற்றும் வளைகுடா கூட்டுறவு நாடுகளில் வர்த்தகம் புரிகின்றன.
முழு ஒத்துழைப்புகுறைந்த ஊதியத்தில் கிடைக்கும் தொழிலாளர்கள், பலதரப்பட்ட தொழில்களை மேற்கொள்வதற்கான சுதந்திரம், தாராளமயமாக்கல் கொள்கை போன்றவை, இந்திய நிறுவனங்களுக்கு, சாதகமான வர்த்தக சூழலை வழங்கும் வகையில் உள்ளன. அதிக வருவாய் உள்ள தனிப்பட்ட நபர்கள், நிதி நிறுவனங்கள், சிறிய, பெரிய அளவிலான முதலீட்டு நிறுவனங்கள், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவன முதலீட்டாளர்கள், பஹ்ரைனில் வர்த்தகம் மேற்கொள்ள, அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|