பதிவு செய்த நாள்
10 அக்2016
10:54

சென்னையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் எதிரொலியாக, தங்களின் உடைமைகளை பாதுகாப்பதற்காக, காப்பீடு திட்டத்தில் சேருவோரின் எண்ணிக்கை, 25 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.
சென்னையில், 2015 டிசம்பரில், 100 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு, பலத்த மழை பெய்து, நகரமே வெள்ளக்காடானது; ஆயிரக் கணக்கான வீடுகளில் மழைநீர் புகுந்ததால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கார்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை மக்கள் இழந்தனர். சொந்த ஊரிலேயே அகதிகளை போல, வீடு களை விட்டு பொதுமக்கள் வெளியேறினர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களில், வெள்ள நீர் புகுந்ததால் உபரணங்கள் முற்றிலும் செயலிழந்தன.
உற்பத்தி பாதிப்பு
நாட்டின் முக்கிய வாகன உற்பத்தி மையமான சென்னையில், பல ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தயாரான கார்கள், வெளியூருக்கு போக முடியாமல் தேங்கி நின்றன. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணி கள், முற்றிலும் செயலிழந்தன. சென்னை நகரமே ஒரு வார காலத்திற்கு ஸ்தம்பித்தது. சென்னையில் சுனாமி ஏற்படுத்திய பாதிப்பை விட பல மடங்கு இழப்பை, வெள்ளம் நிகழ்த் தியது. அப்போது, தங்கள் உடைமை களை இழந்த பலரும், அவற்றை திரும்பப் பெற முடியாமல், வாழ்க் கையை தொலைத்தனர். அரசு கொடுத்த, 5,000 ரூபாய்; 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம், 'யானை பசிக்கு சோளப் பொரியாய்' காணாமல் போனது.
ரூ.15 ஆயிரம் கோடி
சென்னையில், வெள்ளத்தால், 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்புஏற்பட்டதாக, 'அசோசெம்' என்ற, தேசிய அளவிலான தொழில் வர்த்தக அமைப்பு தெரிவித்தது. அதில், 40 சதவீதத்திற்கும் குறைவாகவே, இழப்பீடு தொடர் பான கோரிக்கை கள், காப்பீடு நிறுவனங்களுக்கு வந்தன. மொத்தம், 52 ஆயிரம் பேரிடம் இருந்து, 6,000 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே இழப்பீட்டிற்கான கோரிக்கை வந்தது. மீதம், 50 சதவீதத்திற்கும் அதிக மான இழப்பு, காப்பீடு செய்யப்படாததால், வெள்ளத் தில் கரைந்து போனது. இச்சம்பவத்திற்கு பின், காப்பீடு செய்வோரின் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்துள்ளது. இது குறித்து, தனியார் காப்பீட்டு நிறுவனத்தை சேர்ந்த, கடந்த ஆண்டு அதிக அளவில் வாகன இழப்பீடு வழங்கிய ஒரு நிறுவனத்தின் அதிகாரி கூறுகையில், 'சென்னை வெள்ளத்திற்கு பின், காப்பீடு பெறுவோரின் எண்ணிக்கை, 25 சதவீதத் திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இதுபோல், வாகன காப்பீடும் அதிகரித்துள்ளது. மொத்தத்தில், டிசம்பருக்கு பிறகு, 100 சதவீதத்திற்கும் அதிகமாக பிரீமியம் தொகை வருவாய்விபத்து காப்பீடு மட்டும் எடுத்து வந்த நிலை மாறி, அனைத்து விதமான சேதாரங்களுக்கு மான, ஒட்டுமொத்த காப்பீடு எடுப்பது உயர்ந்துள்ளது. அத்துடன், தீ விபத்திற்கு மட்டும் காப்பீடு செய்தது போய், உள்ளே இருக்கும் பொருட் களுக்கும் சேர்த்து காப்பீடு செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவன அதிகாரி கள் கூறும் போது, 'சிறு, குறு, தொழில் நிறுவனத்தினர், ஏற்கனவே காப்பீடு செய்திருந்தாலும், அதை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் நிகழும் போது, கருவிகள் மற்றும் உற்பத்தி பொருட்களுக்கும் இழப்பீடு கிடைக்கும் வகையில் காப்பீட்டை, மாற்றித் தரக் கோருவது அதிகரித்து உள்ளது' என்றனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|