பதிவு செய்த நாள்
11 அக்2016
00:08

புதுடில்லி : மாருதி சுசூகி, பலேனோ கார்களை, 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளது.
மாருதி சுசூகி, 2015 அக்., மாதம், பலேனோ எனும், ‘பிரிமியம் ஹாட்ச்பேக்’ காரை அறிமுகம் செய்தது. உள்நாட்டில் இந்த காரின் விற்பனை, இதுவரை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது, பலேனோ, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், 100 நாடுகளுக்கு, பலேனோ கார்களை ஏற்றுமதி செய்ய, மாருதி திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதுவரை, 38 ஆயிரம் பலேனோ கார்கள், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. விரைவில், கரீபியன் தீவுகள், உருகுவே, பொலிவியா, கோஸ்டா ரிகா, பெரு, தென் ஆப்ரிக்கா, இந்தோனேஷியா, ஓமன், குவைத், கத்தார் உள்ளிட்ட, நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|