பதிவு செய்த நாள்
11 அக்2016
00:08

புதுடில்லி : ஐ.டி.சி., நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த, கிங் மேக்கர் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் உள்ள, தன் அனைத்து பங்குகளையும் விற்க உள்ளது.
ஐ.டி.சி., நிறுவனம், சிகரெட், ஓட்டல் உள்ளிட்ட வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவில் உள்ள இதன் துணை நிறுவனமான, கிங் மேக்கர் மார்க்கெட்டிங், அந்நாட்டில், புகையிலை பொருட்கள் இறக்குமதி, மொத்த விற்பனைக்கான உரிமத்தை பெற்றுள்ளது. ஐ.டி.சி., நிறுவன புகையிலை பொருட்களை, கிங் மேக்கர் வினியோகம் செய்கிறது. இந்நிலையில், கிங் மேக்கரில் உள்ள, அனைத்து பங்குகளையும் விற்பனை செய்ய, ஐ.டி.சி., முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, ஐ.டி.சி., நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: கிங் மேக்கரின் அனைத்து பங்குகளையும், 160 கோடி ரூபாய்க்கு விற்க இருக்கிறோம். இனி அமெரிக்காவில், எங்கள் நிறுவனத்தின் மூலம், விற்பனை செய்வது குறித்து முடிவு எடுக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|