பதிவு செய்த நாள்
11 அக்2016
00:09

புதுடில்லி : கிரிஸ்டல் கிராப், 2,500 கோடி ரூபாய்க்கு வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளது.
கிரிஸ்டல் கிராப் நிறுவனம், வேளாண் துறை ரசாயனம், வேளாண் இயந்திரங்கள், விதைகள் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், கடந்த நிதியாண்டில், 1,200 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. இந்நிலையில், அதன் வருவாயை, இரு மடங்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் தலைவர் நந்த் கிஷோர் கூறியதாவது: நடப்பாண்டில், பருவமழை நன்கு உள்ளதால், வேளாண் துறை சிறப்பாக வளர்ச்சியடையும் என, எதிர்பார்க்கிறோம். எங்கள் நிறுவனம், பி.ஏ.எஸ்.எப்., நிறுவனத்தின், ‘பவிஸ்டின்’ பிராண்டை கையகப்படுத்தி உள்ளது. இதன் மூலம், எங்கள் விற்பனை அதிகரிக்கும். ஆண்டுதோறும், புதிய பொருட்களை சந்தையில் அறிமுகம் செய்கிறோம். வரும், 2020ல், 2,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|