பதிவு செய்த நாள்
11 அக்2016
00:09

புதுடில்லி : ‘ஏற்றுமதியாளர்களுக்கு, தற்போது வழங்கப்படும் வரிச்சலுகைகள், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்த பின்னும் தொடர வேண்டும்’ என, மத்திய நிதியமைச்சகத்திடம், மத்திய வர்த்தக அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜி.எஸ்.டி., 2017 ஏப்ரலில் அறிமுகமாக உள்ளது. இந்த வரி திட்டம், ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு வரி செலுத்தி விட்டு, பின், அதை திரும்பப் பெற்றுக் கொள்ள வகை செய்கிறது. இது, வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அவர்களின் நடைமுறை மூலதனம், செலுத்திய வரியை திரும்பப் பெறும் காலம் வரை முடங்கும் என்பதால், ஏற்றுமதியாளர்கள், தற்போதைய வரிச்சலுகை நடைமுறை தொடர வேண்டும் என்கின்றனர். இதையடுத்து, சரக்கு மற்றும் சேவை வரியில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தத்திற்கு, தனி விதிமுறைகளை உருவாக்க, நிதியமைச்சகத்திடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|