பதிவு செய்த நாள்
11 அக்2016
00:10

புதுடில்லி : இந்திய வர்த்தக கூட்டமைப்பான, ‘அசோசெம்’ வெளியிட்டுள்ள அறிக்கை: ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்துள்ள போதிலும், நடப்பு பண்டிகை காலத்தில், குடியிருப்புகளின் விற்பனை குறைவாகவே உள்ளது. அதிக கடனில் தத்தளிக்கும் கட்டுமான நிறுவனங்கள், புதிய திட்டங்களில் இறங்க தயங்குகின்றன. ஏற்கனவே உள்ள குடியிருப்பு திட்டங்களை, உறுதி அளித்தபடி முடிக்க முடியாமல் திணறுகின்றன.
டில்லி மற்றும் மும்பையில், புதிய கட்டுமான திட்டங்கள், 50 – 60 சதவீதம் குறைந்துள்ளன; இது, சென்னை மற்றும் ஐதராபாத்தில், 40 – 45 சதவீதமாக உள்ளது. பெங்களூரில், முறையற்ற கட்டுமானங்களை அகற்றுதல், காவிரி பிரச்னை போன்றவற்றால், கட்டுமான திட்டங்கள் முடங்கியுள்ளன. மக்கள், கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளில், உடனடியாக குடியேற விரும்புகின்றனர். ஆனால், பல கட்டுமான பணிகள் பாதியில் உள்ளதால், கட்டுமான நிறுவனங்களின் பணப்புழக்கம் குறைந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|