பதிவு செய்த நாள்
11 அக்2016
00:10

புதுடில்லி : காஷ்மீர் எல்லையில் பதற்றம் நிலவுவதால், பாகிஸ்தானுக்கு, இந்திய பருத்தி ஏற்றுமதி குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உலகில், பருத்தி பயன்பாட்டில், பாக்., மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்நாட்டுக்கு, இந்தியாவில் இருந்து, அதிகளவில் பருத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது; இந்தாண்டுக்கான ஏற்றுமதி, செப்., மாதத்தில் துவங்கும். இந்நிலையில், தற்போது, காஷ்மீர் எல்லை பகுதியில், பதற்ற நிலை நீடிப்பதால், இந்தியாவில் இருந்து, பாகிஸ்தானுக்கான, பருத்தி ஏற்றுமதி குறையும் என, தெரிகிறது.
இதுகுறித்து, பருத்தி ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது: நடப்பு பருத்தி பருவத்தில், 50 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதியாகும் என, மதிப்பிடப்பட்டது. ஆனால், கடந்த இரு வாரங்களாக, பாகிஸ்தானில் இருந்து, பருத்தி ஆர்டர் வெகுவாக குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால், பருத்தி ஏற்றுமதி, 30 லட்சம் பொதிகளாக குறையும். இந்திய ஏற்றுமதியாளர்கள் பாகிஸ்தானை விட்டுவிட்டு, புதிய சந்தைகளை தேடி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|