பதிவு செய்த நாள்
11 அக்2016
00:11

புதுடில்லி : நடப்பு, அக்., முதல் வாரத்தில், அன்னிய முதலீட்டு நிறுவனங்கள், இந்திய பங்குச்சந்தைகளில், 1,445 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்துள்ளன.
ரிசர்வ் வங்கி, கடந்த வாரம், வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ வட்டியை, 0.25 சதவீதம் குறைத்து, 6.25 சதவீதமாக நிர்ணயித்தது. இது, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத, குறைந்தபட்ச வட்டி விகிதமாகும். இதன் காரணமாகவே, அன்னிய முதலீட்டு நிறுவனங்கள், கடந்த வாரம், இந்திய பங்குச்சந்தைகளில், அதிகளவில் முதலீடு செய்துள்ளதாக, சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்தாண்டு, ஜன., – பிப்., மாதங்களில், இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து, 16,648 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை, அன்னிய முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். ஆனால், மார்ச்சில் இருந்து, பங்குச்சந்தைகளில், அன்னிய முதலீடு அதிகரித்து வருகிறது. வாகனத் துறை, மந்த நிலையில் இருந்து மீண்டுள்ளதும், மக்களிடம் செலவழிப்பு வருவாய் அதிகரித்திருப்பதும், ரூபாய் மதிப்பு உயர்ந்திருப்பதும், பங்குச்சந்தையில், அன்னிய முதலீடு அதிகரிக்க துணை புரிந்துள்ளன.
இந்தாண்டு, இதுவரை, அன்னிய முதலீட்டு நிறுவனங்கள், இந்திய பங்குச்சந்தையில், 52,738 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. இதே காலத்தில், கடன் பத்திரச் சந்தையில் இருந்து, 1,249 கோடி ரூபாய் முதலீடு திரும்பப் பெறப்பட்டு உள்ளது. இதையடுத்து, அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் நிகர முதலீடு, 51,489 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|