பதிவு செய்த நாள்
16 அக்2016
05:33

புதுடில்லி;மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:உள்நாடு மற்றும் சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளது. இதனால், செப்டம்பரில், தங்கம் இறக்குமதி, 10.3 சதவீதம் சரிவடைந்து, 180 கோடி டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 200 கோடி டாலராக இருந்தது.
பிப்ரவரி முதல், தங்கம் இறக்குமதி குறைந்து வருகிறது. ஏப்., – ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் தங்கம் இறக்குமதி, 60 டன்னாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, இதே காலத்தில், 250 டன் தங்கம் இறக்குமதியானது. கடந்த, 2015 –16ம் நிதியாண்டில், 650 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. தங்கம் பயன்பாட்டில், சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.தங்கம் போன்று, வெள்ளி இறக்குமதியும் குறைந்து வருகிறது. செப்டம்பரில், வெள்ளி இறக்குமதி, 13.91 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 48.47 கோடி டாலராக இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|