பதிவு செய்த நாள்
16 அக்2016
05:34

புதுடில்லி:‘நிலக்கரி இறக்குமதி குறைந்துள்ளதால், சரக்கு போக்குவரத்து வளர்ச்சி, நடுத்தர கால அளவில் குறையும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘கிரிசில்’ ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதன் விபரம் :பொதுத் துறையைச் சேர்ந்த, கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி அதிகரித்து உள்ளதால், அதன் தேவைக்கும் அளிப்பிற்கும் உள்ள இடைவெளி குறைந்துள்ளது. இதனால், நிலக்கரி இறக்குமதி குறைந்துள்ளது. சர்வதேச மந்த நிலையால், நாட்டின் ஏற்றுமதியும் மந்தமடைந்து உள்ளது.
இது போன்ற காரணங்களால், நடுத்தர கால அளவில், சரக்குகள் மற்றும் சரக்கு பெட்டகங்களை கையாள்வது குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. எனினும், குறைந்த தரத்திலான இரும்புத் தாது ஏற்றுமதிக்கு, வரிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளதால், இவ்வகை சரக்கு போக்குவரத்து சற்று அதிகரிக்கும் என, தெரிகிறது. பொதுத் துறையைச் சேர்ந்த, என்.எம்.டி.சி., நிறுவனம், வெளிநாடுகளுக்கு இரும்புத் தாது ஏற்றுமதி மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது. அதனால், இரும்புத் தாது சார்ந்த சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும்.
கோவாவில், கனிமச் சுரங்க நடவடிக்கைகள் மீண்டும் துவங்கிஉள்ளன. இதுவும், சரக்கு போக்குவரத்தில், தேக்க நிலையை ஓரளவு குறைக்கும்.அதே சமயம், நீண்ட கால அடிப்படையில், சரக்கு போக்குவரத்து வளர்ச்சி, வலுவாக இருக்கும். மின்சாரம் உள்ளிட்ட துறைகளுக்கு தேவையான நிலக்கரி, கச்சா எண்ணெய் ஆகியவற்றை கையாள்வதன் மூலம், இந்த வளர்ச்சி சாத்தியமாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.கப்பல் போக்குவரத்து அமைச்சகம், அடுத்த, 5 – 10 ஆண்டுகளுக்கு, துறைமுக மேம்பாட்டு திட்டங்களை வடிவமைத்து உள்ளது. இந்த முதலீட்டு திட்டங்கள், சரக்கு போக்குவரத்து வளர்ச்சிக்கு துணை நிற்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|