புதிய வளர்ச்சி வங்கி மதிப்பீடு:இந்தியா சரியான பாதையில் செல்கிறது:பொருளாதாரம் ‘திடீர்’ எழுச்சி காணும்புதிய வளர்ச்சி வங்கி மதிப்பீடு:இந்தியா சரியான பாதையில் ... ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: 66.83 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: 66.83 ...
ஒப்பந்தங்களின் முக்கியத்துவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2016
07:34

பொரு­ளா­தார நோபல் பரிசு, இந்த ஆண்டு, ஹார்­வர்டு பல்­க­லைக்­க­ழ­கத்தில் பணி­யாற்றும் பிரிட்டன் பொரு­ளா­தார மேதை ஆலிவர் ஹார்ட் மற்றும் எம்.ஐ.டி.,யில் பணி­யாற்றும் பின்­லாந்து பொரு­ளா­தார மேதை பென் ஹாம்ஸ்டாம் ஆகி­யோ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.
பொரு­ளா­தார உலகில் ஒப்­பந்­தங்கள் செயல்­படும் விதத்தை சிறப்­பாக புரிந்து கொள்ள உதவும், ஒப்­பந்த கோட்­பாடு தொடர்­பான பங்­க­ளிப்­பிற்­காக இவர்கள் நோபல் பரி­சு­ பெறுகின்றனர்.நவீன பொரு­ளா­தா­ரத்தில் ஒப்­பந்­தங்கள் முக்­கிய பங்கு வகிக்­கின்­றன. வங்­கித்­துறை துவங்கி, இன்­சூரன்ஸ் உள்­ளிட்ட பல துறை­க­ளுக்­கான அடிப்­ப­டை­யாக ஒப்­பந்­தங்­களே அமை­கின்­றன. தனி மனி­தர்­களும் கூட பல­வித ஒப்­பந்­தங்­களை செய்து கொள்­கின்­றனர். தனி மனி­தர்கள், சுய­நலம் கொண்­ட­வர்­க­ளாக இருந்­தாலும், பொரு­ளா­தார வாய்ப்­பு­களை பயன்­ப­டுத்திக் கொள்ள மற்­ற­வர்­க­ளுடன் இணைந்து செயல்­பட வேண்­டி­யி­ருக்­கி­றது. இதற்­காக பரஸ்­பரம் ஒத்துப் போகவும், முரண்­களை குறைக்­கவும் ஒப்­பந்­தங்கள் தேவைப்­ப­டு­கின்­றன.ஒப்­பந்­தங்கள், இரு தரப்­பினர் நீண்ட காலத்­திற்கு ஒன்­றாக சேர்ந்து செயல்­ப­டு­வ­தற்கு, வழி வகுக்­கின்­றன. மேலும் ஒரே இலக்கை அடை­வ­தற்­கான விதி­மு­றை­களை வகுத்துக் கொள்­ளவும் உத­வு­கின்­றன. பல­வி­த­மான ஒப்­பந்­தங்கள் இருக்­கின்­றன. ஒப்­பந்­தங்­களில் பல­வித சிக்­கல்­களும் உள்­ளன. ஒரு தரப்­பிற்கு அதிக தக­வல்கள் தெரி­யலாம். ஒரு தரப்­பிற்கு சாத­க­மாக இருக்­கலாம். இந்த பிரச்­னை­களை புரிந்து கொண்டு, சிறந்த முறையில் ஒப்­பந்­தங்­களை வகுக்க, ஒப்­பந்த கோட்­பாடு அடிப்­ப­டை­யாக அமை­கி­றது.
உதா­ர­ணத்­திற்கு, ஒரு அம்மா, பிள்­ளை­களை கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்­லும்­போது, அவர்­க­ளுக்­கான கேக்கை பங்கு பிரிப்­பதில் பிரச்னை வரக்­கூ­டாது என நினைக்­கிறார். இதை தவிர்க்க, பெரிய பிள்ளை கேக்கை பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்றும், ஆனால், அதில் எதை எடுத்துக் கொள்­வது என தீர்­மா­னிக்கும் உரிமை இரண்­டா­வது பிள்­ளைக்கு உரி­யது என்றும் கூறு­கிறார். பெரிய பிள்ளை சரி­பா­தி­யாக கேக்கை வெட்­டினால் மட்­டுமே இரண்­டா­வது பிள்­ளைக்கு அது சாத­க­மாக அமை­யாமல் இருக்கும். இது­போன்ற எளிய சுவா­ரஸ்­ய­மான சம்பவம் முதல், நிறு­வ­னங்­களின் சிக்­க­லான ஒப்­பந்­தங்கள் வரை, அனைத்து வித­மான ஒப்­பந்­தங்­களில் உள்ள பிரச்­னை­களை எதிர்­கொள்­வ­தற்­கான கோட்­பா­டு­களை, நோபல் மேதை­களின் ஆய்­வுகள் அளித்­துள்­ளன. உதா­ர­ணத்­திற்கு, ஒரு நிறு­வ­னத்தின் வளர்ச்­சிக்கு ஏற்ப, அதன் மேலா­ள­ருக்கு ஊதிய உயர்வு அளிக்­கப்­ப­டு­வ­தாக இருந்­தாலும், ஊக்கத் தொகை அதிகம் பெறு­வ­தற்­காக, மேலாளர் குறு­கிய கால வளர்ச்­சியில் மட்டும் கவனம் செலுத்­தினால், நீண்­ட­கால வளர்ச்சி பாதிக்­கப்­ப­டலாம்.
கடந்த, 2008ல், அமெ­ரிக்­காவில் முத­லீட்டு வங்­கி­யா­ளர்கள் பலர், இப்­படி குறு­கி­ய­கால நலனில் கவனம் செலுத்தி, நீண்­ட­கால ரிஸ்க்கை கவ­னிக்க மறந்­ததால் தான், அந்­நாட்டில் வீட்­டுக்­கடன் நெருக்­கடி உண்­டா­னது. இது­போல ஒப்­பந்­தங்­களில் எழக்­கூ­டிய சிக்­கல்­களை எல்லாம் புரிந்து கொண்டு செயல்­பட, நோபல் மேதை­களின் ஆய்­வுகள் வழி­காட்­டு­கின்­றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)