ஒப்பந்தங்களின் முக்கியத்துவம்ஒப்பந்தங்களின் முக்கியத்துவம் ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: 66.83 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு: 66.83 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஷாப்பிங் செய்யும் முன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2016
07:35

ஷாப்பிங் உங்­க­ளுக்கு தெரியும். ஆனால் ஷாப்பிங் மோகம் பற்றி தெரி­யுமா? அள­வுக்கு அதி­க­மாக பொருட்­களை வாங்கும் பழக்­கத்­தையே இவ்­வாறு குறிப்­பி­டு­கின்­றனர். தேவை­யில்­லாத பொருட்­களை வாங்கி குவிக்கும் இந்த பழக்கம், உச்­சத்தை தொடும்­போது, ஷாப்பிங் அடி­மை­க­ளாக மாறி­விடும் அபா­யமும் இருக்­கி­றது. இ – காமர்ஸ் நிறு­வ­னங்கள் கோடிக்­க­ணக்கில் விற்­பனை செய்­தி­ருப்­ப­தாக பெருமை­யுடன் அறி­விப்­பதை பார்க்­கும்­போது, இந்­தி­யாவில் பலர் ஷாப்பிங் மோகத்­திற்கு இலக்­காகி இருக்­கலாம் எனத் தெரி­கி­றது. பலரும் தங்­களை அறி­யா­ம­லேயே இந்த நிலைக்கு இலக்­காகி இருக்­கலாம். பலர், தங்­க­ளுக்கு பிடித்­த­மா­ன­வற்றை வாங்­கு­வதை கட்­டுப்­ப­டுத்த முடியாத அள­வுக்கு, கட்­டாய ஷாப்பிங் பழக்கம் கொண்­டி­ருக்­கலாம்.
­ஷாப்பிங் மோகம் ஏன்?* ஷாப்பிங் செய்­வது சில­ருக்கு, வலி நிவா­ரணி போல அமை­கி­றது. மோச­மான நாளில் இருந்து விடு­பட உத­வு­கி­றது.* சுய­ம­திப்பு குறை­வாக உள்­ள­வர்கள், ஆடைகள் உள்­ளிட்­ட­வற்றை வாங்­கு­வதன் மூலம், நல­மாக இருப்­ப­தாக நினைக்­கின்­றனர் * விலை உயர்ந்த பொருட்­களை வாங்­கு­வது உற்­சா­கத்­தையும், செலவு செய்யும் ஆற்றல் மிக்க உணர்­வையும் அளிக்­கி­றது* ஷாப்பிங் செய்­யும்­போது, விற்­பனை பிர­தி­நி­திகள் அளிக்கும் கவனம் சுய, கட்­டுப்­பாட்டை உணர வைக்­கி­றது * சிலர் தள்­ளு­ப­டியை தவ­ற­விட்டால், மீண்டும் கிடைக்­காது என நினைக்­கின்­றனர். குழந்­தை­க­ளுடன் செல­வி­டாத நேரத்தை, பொருட்­களை வாங்கி ஈடு­செய்ய முற்­ப­டு­கின்­றனர்.

அறி­வது எப்­படி? ஷாப்பிங் மோகத்தை அறி­வ­தற்­கான கேள்­விகள்* நீங்கள் எப்­போதும் ஷாப்பிங் பற்றி யோசிக்­கி­றீர்­களா?* ஷாப்பிங் செய்­வதன் மூலம் மன­நிலை மாறு­கி­றதா?* ஷாப்பிங் செய்­வது உங்கள் நிதி­நி­லையை பாதிக்­கி­றதா?* ஷாப்பிங் செய்­வதை குறைக்க நினைத்தும் முடி­ய­வில்­லையா?* ஷாப்பிங் செய்­யா­விட்டால் மோச­மாக உணர்­கி­றீர்­களா?* அதே திருப்­தியை பெற, அதிக ஷாப்பிங் செய்யும் நிலையா?* இது உங்கள் பணியை பாதிக்­கி­றதா?இவற்றில் பெரும்­பா­லான கேள்­வி­க­ளுக்கான பதில் ஆம் என்றால், நீங்கள் ஷாப்பிங் மோகம் கொண்டிருக்கலாம்.
பாதிப்­புகள்ஷாப்பிங் மோகம் ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய பாதிப்­புகள்* அள­வுக்கு அதி­க­மான ஷாப்பிங் செல­வுகள் நிதி இலக்­கு­களை பாதிக்கும்* ஷாப்பிங் மோகம் அதி­க­மானால், பணியை பாதிக்கும். குடும்ப உற­வு­க­ளிலும் சிக்­கலை உண்­டாக்கும் * சேமிப்பை குறைத்து, முத­லீடும் பாதிக்கும் * வரி சிக்­க­லையும் உண்­டாக்­கலாம்.
தவிர்க்கும் வழிகள்அள­வுக்கு அதி­க­மான ஷாப்பிங்கை குறைக்க...* செலவு செய்யும் முன் முத­லீடு செய்­யுங்கள். சேமிப்பை தானி­யங்கி மய­மாக்­கவும். எஸ்.ஐ.பி., திட்டம் மூலம் முத­லீடு செய்­யவும்* விலை உயர்ந்த பொருட்­களை வாங்கும் முடிவை தள்­ளிப்­போட்டு, அது தேவையா என யோசி­யுங்கள்* மற்­ற­வர்­களை பார்த்து அல்­லது மற்­ற­வர்­க­ளுக்­காக பொருட்­களை வாங்­கு­வதை தவிர்க்­கவும்* மனச்­சோர்­வுக்கு இலக்­கான நேரத்தில், ஷாப்பிங் செல்ல வேண்டாம்* மாதந்­தோறும் சிறிய தொகையை ஒதுக்கி, அதில் விருப்பம் போல ஷாப்பிங் செய்­யவும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)