பதிவு செய்த நாள்
17 அக்2016
15:11

சேலம்;டீசல் விலை உயர்வால், லாரி வாடகையை, 100 கி.மீ.,க்கு, 600 ரூபாய் உயர்த்த இருப்பதாக, உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில செயலர், தனராஜ் அளித்த பேட்டி:கச்சா எண்ணெய் விலை, 56 டாலராக அதிகரித்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. டீசல் விலை, 2.88 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், லாரி ஒன்றின், 1,000 கி.மீ., பயணத்துக்கு, 6,000 ரூபாய் வரை, கூடுதல் எரிபொருள் செலவு ஏற்படுகிறது.எனவே, தற்போதைய வாடகையில், 100 கி.மீ.,க்கு, 600 ரூபாய் வரை உயர்த்தினால் மட்டுமே, லாரிகளை இயக்க முடியும்; இதை, தவிர்க்க முடியாது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது.எண்ணெய் நிறுவனங்கள், 15 நாட்களுக்கு ஒரு முறை டீசல் விலையில் மாற்றம் செய்வதை ரத்து செய்து, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, விலை மாற்றம் செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|