பதிவு செய்த நாள்
18 அக்2016
23:36

புதுடில்லி : பி.என்.பி., ஹவுசிங் பைனான்ஸ், பங்கு வெளியீட்டின் மூலம், 3,000 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணை நிறுவனமான, பி.என்.பி., ஹவுசிங் பைனான்ஸ், வீட்டுக்கடன் வழங்கி வருகிறது. இது, இந்தியாவில், வீட்டுக்கடன் வழங்குவதில், ஐந்தாவது பெரிய நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 3,000 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. இதன் பங்கு வெளியீடு, வரும், 25ம் தேதி துவங்கி, 27ம் தேதியுடன் நிறைவடைகிறது.
பி.என்.பி., ஹவுசிங்கின் கடன் வழங்கும் அளவு, ஆண்டுதோறும், 61.76 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. அதன்படி, 2012ல் வழங்கப்பட்ட, 3,970 கோடி ரூபாய் கடன், கடந்த ஆண்டில், 27 ஆயிரத்து, 177 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இந்தியாவில், வீட்டுக்கடன் வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், 2020ல், வீட்டுக்கடன் அளவு, 8.30 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|