ரிசர்வ் வங்கி மீண்டும் வட்­டியை குறைக்­குமா?ரிசர்வ் வங்கி மீண்டும் வட்­டியை குறைக்­குமா? ... ரூபாயின் மதிப்பிலும் ஏற்ற - இறக்கம் ரூபாயின் மதிப்பிலும் ஏற்ற - இறக்கம் ...
ரூ.2.50 லட்சம் கோடி முத­லீடு; ‘மொபைல் போன் சேவையில் சூதாட வர­வில்லை’ ; ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்­பானி காட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2016
23:39

மும்பை : ‘ரிலையன்ஸ் ஜியோ நிறு­வனம், மொபைல் போன் சேவையில் இறங்­கி­யுள்­ளதை, சூதாட்­டத்­துடன் ஒப்­பிடக் கூடாது; நன்­றாக சிந்­தித்து, நேர்த்­தி­யான பொறி­யியல் கட்­ட­மைப்­புடன் தான், இவ்­வ­ணி­கத்தில் நுழைந்­துள்ளோம்’ என, ரிலையன்ஸ் குழு­மத்தின் தலைவர் முகேஷ் அம்­பானி தெரி­வித்து உள்ளார்.
அவர், ‘தி பிரின்ட்’ என்ற வலை­தள செய்தி நிறு­வ­னத்­திற்கு அளித்த பேட்டி: தொலைத்­தொ­டர்பு சேவையில், ரிலையன்ஸ் குழுமம், இரண்­டா­வது முறை­யாக கள­மி­றங்கி உள்­ளது. இந்த முறை, மிகவும் ஆழ்ந்து சிந்­தித்து, நவீன பொறி­யியல் கட்­ட­மைப்­புடன், மிக நேர்த்­தி­யான செயல் திட்­டத்­துடன் கள­மி­றங்கி உள்ளோம். இது, சாதா­ரண திட்டம் அல்ல; முதற்­கட்­ட­மாக, 1.50 லட்சம் கோடி ரூபாய் முத­லீடு செய்­யப்­பட்டு உள்­ளது. இரண்­டா­வது கட்­டத்தில், 1 லட்சம் கோடி ரூபாய் முத­லீடு மேற்­கொள்­ளப்­பட்டு உள்­ளது.
இந்த அள­விற்கு முத­லீடு செய்­வதை, சூதாட்­ட­மாக கருதக் கூடாது. இத்­த­கைய, பிரம்­மாண்­ட­மான முத­லீட்டில், மிகப்­பெ­ரிய சமூக மதிப்பை ஏற்­ப­டுத்­தாத எந்த செய­லையும், ரிலையன்ஸ் செய்­யாது. நாங்கள் செயல்­ப­டு­வ­தற்­கான உரி­மத்தை, இந்த சமூகம் வழங்கும் என்ற திட­மான நம்­பிக்கை எனக்கு உள்­ளது. அதை, வெறும் பணம் சம்­பா­திக்க மட்டும் வழங்கும் உரி­மமாக நாங்கள் கரு­த­வில்லை. கடை­நிலை மக்­க­ளுக்கும், நவீன தொழில்­நுட்­பத்தின் அனைத்து வச­தி­களும் கிடைக்க வேண்டும் என்­பதே, எங்கள் நோக்கம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறு­வனம், ஒரு­புறம், தொலைத்­தொ­டர்பு ஒழுங்­கு­முறை கட்­டுப்­பாட்டு அமைப்­பு­டனும், மறு­புறம், மொபைல் போன் சேவை நிறு­வ­னங்­க­ளு­டனும், எத்­த­னையோ பிரச்­னை­களை எதிர் கொண்­டுள்­ளது. அவற்றை, ஆக்­கப்­பூர்­வ­மான சோத­னை­யா­கவே எடுத்துக் கொண்­டுள்ளோம். அதிக மதிப்பெண் பெற்ற மாண­வ­னுக்கு, தலை­சி­றந்த கல்வி மையத்தில் இடம் கிடைக்­கி­றது. அது பொறுக்­காத சிலர், விடு­தியில் மாண­வனை, ‘ராகிங்’ செய்­வ­தில்­லையா? அது போலத்தான் இதுவும். முன்­னணி மொபைல் போன் சேவை நிறு­வ­னங்கள், ரிலையன்ஸ் ஜியோ வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, ‘உள் இணைப்பு’ கொடுக்­காமல் தடை செய்­கின்­றன.
அது, எனக்கு ஒரு பிரச்­னையே அல்ல. அந்­நி­று­வ­னங்கள் தொலைத்­தொ­டர்பு சேவையில் வலி­மை­யாக உள்­ளதால், அப்­படி செய்­கின்­றன. அவை, எந்த அள­விற்கு தொல்லை கொடுத்­தாலும், அதை என்னால் சமா­ளிக்க முடியும். ஆனால், இப்­பி­ரச்­னையால், தொலைத்­தொ­டர்பு சேவையை பெறும் வாடிக்­கை­யா­ளர்கள் பாதிக்­கப்­படக் கூடாது. அதுவே, என் நோக்கம்.
அதன்­ப­டியே, ரிலையன்ஸ் ஜியோ செயல்­ப­டு­கி­றது; அனைத்து தொலைத்­தொ­டர்பு சேவை நிறு­வ­னங்­க­ளு­டனும் இணைந்து செயல்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பையும் வழங்­கி­யுள்­ளது. ஒருங்­கி­ணைந்து செயல்­ப­டு­வதன் மூலம், இந்­தி­யாவில், டிஜிட்டல் புரட்­சியை, அடுத்­த­கட்­டத்­திற்கு கொண்டு செல்­லலாம்.இவ்­வாறு அவர் கூறினார்.
‘‘அடுத்த சில ஆண்­டு­களில், டிஜிட்டல், மீடியா, பொழு­து­போக்கு, சில்­லரை விற்­பனை உட்­பட, ரிலையன்ஸ் நிறு­வ­னத்தின் நுகர்வோர் சார் வணி­கங்கள் அனைத்தும், அதன் பிர­தான எண்ணெய் வர்த்­த­கத்­திற்கு நிக­ரான வளர்ச்­சியை பெறும்’’

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)