பதிவு செய்த நாள்
19 அக்2016
23:52
புதுடில்லி : இருசக்கர வாகனங்கள் விற்பனையில், ஹோண்டா நிறுவனம், 15 மாநிலங்களில் முன்னணியில் உள்ளது.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம், இருசக்கர வாகனங்கள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின், ‘ஆக்டிவா’ ஸ்கூட்டருக்கு வாகன ஓட்டிகளிடம், அமோக வரவேற்பு காணப்படுகிறது. இதையடுத்து டில்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட, 15 மாநிலங்களில், இருசக்கர வாகன விற்பனையில், ஹோண்டா முதலிடத்தில் உள்ளது. அதேசமயம், குறைந்த வருவாய் உள்ள ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உ.பி., ஆகிய மாநிலங்களில், ஹீரோ மோட்டோகார்ப் முதலிடத்தில் உள்ளது.
நடப்பு நிதியாண்டின், ஏப்., – செப்., வரையிலான காலத்தில், நாட்டில், இருசக்கர வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஹோண்டா நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 26.7 சதவீதத்தில் இருந்து, 28 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|