பதிவு செய்த நாள்
19 அக்2016
23:52
புதுடில்லி : மேக்மைடிரிப் நிறுவனம், ஐபிபோ நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளது.
இந்தியாவில், மேக்மைடிரிப் நிறுவனம், பயணச் சீட்டுகள், தங்கும் வசதி உள்ளிட்டவற்றை முன்பதிவு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த, நாஸ்பெர்ஸ் மற்றும் சீனாவின், டென்சென்ட் ஹோல்டிங் ஆகியவற்றுக்கு சொந்தமான ஐபிபோ, ‘கோஐபிபோ, ரெட்பஸ்’ பிராண்டுகளில் பயண டிக்கெட் முன்பதிவு தொழிலில் உள்ளது. தற்போது, விமான டிக்கெட், ஓட்டல் அறை முன்பதிவு செய்யும் துறை, விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது.
இந்நிலையில், மேக்மைடிரிப், ஐபிபோ நிறுவனத்தை வாங்க உள்ளது. தற்போது, உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல விமான டிக்கெட், தங்குமிடம் போன்றவற்றை முன்பதிவு செய்வதில், மேக்மைடிரிப் சிறப்பாக உள்ளது. ஐபிபோவை வாங்குவதன் மூலம், இந்திய போக்குவரத்து சேவையில், மேக்மைடிரிப், அதிக வாடிக்கையாளர்களை கவரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|