பதிவு செய்த நாள்
19 அக்2016
23:55
புதுடில்லி : எல்.ஜி., நிறுவனத்தின் நுகர்வோர் சாதனங்கள் விற்பனை, 30 சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ‘டிவி, பிரிஜ், வாஷிங்மிஷன்’ உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்கள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நடப்பாண்டில் அதிகளவில் விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம், விற்பனை, 30 சதவீதம் அதிகரித்து, 7,150 கோடி ரூபாயாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, எல்.ஜி., நிறுவன அதிகாரி, ஹியுன் வூ லீ கூறியதாவது: எங்கள் நிறுவனத்திற்கு, கடந்த ஆண்டில், 5,500 கோடி ரூபாய் விற்றுமுதல் கிடைத்தது. நடப்பாண்டில், பண்டிகை கால விற்பனை நன்கு உள்ளது. தற்போது, ‘டிவி’ தயாரிக்கும் சாதனங்கள் விலை உயர்ந்தும், அவற்றின் விலையை நாங்கள் அதிகரிக்கவில்லை. இதனால், நடப்பாண்டில் எங்கள் விற்பனை, 30 சதவீதம் உயர்ந்து, 7,150 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|