பதிவு செய்த நாள்
24 அக்2016
07:39

இந்தியர்களை பொறுத்தவரை, தங்கம் எல்லாமுமாக இருக்கிறது. முதலீடாகவும் அமைகிறது. தங்கம் எந்த அளவு சிறந்த முதலீடு என்பது தொடர்பாக, மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், முதலீடு நோக்கில் நோக்கும் போது, மற்ற வடிவில் தங்கத்தை வாங்குவதை விட, காகித வடிவில் வாங்குவதே சிறந்ததாக கருதப்படுகிறது. செய்கூலி, சேதாரம் மூலமான இழப்பு இல்லாதது, பாதுகாப்பு பிரச்னை இல்லாமல் இருப்பது உள்ளிட்ட அம்சங்கள், காகித வடிவிலான தங்கத்தின் அணுகூலமாக கருதப்படுகின்றன. தங்க, இ.டி.எப்.,கள் மற்றும் அரசின் தங்க சேமிப்பு பத்திரங்கள், இந்த வகையின் கீழ் வருகின்றன. இந்த இரு வகையான முதலீடு வாய்ப்புகளின் முக்கிய அம்சங்கள் பற்றி ஒரு ஒப்பீடு:
தங்க பத்திரங்கள்:
* பத்திர வகையை சேர்ந்தது அரசு சார்பில், ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது* ஒவ்வொரு கட்டமாக வெளியிடப்படும் இவை, எட்டு ஆண்டுகள் முதிர்ச்சி கொண்டவை. முதிர்வு காலத்தில், தங்க விலைக்கு நிகரான மதிப்பை பெறலாம்* நிர்வாக கட்டணம் என்று எதுவுமில்லை. மேலும், முதலீடு காலத்திற்கு முதலீடு தொகை மீது, ஆண்டுக்கு, 2.75 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. (6வது கட்டமாக வெளியிடப்படும் பத்திரங்களுக்கு, வட்டி, 2.50 சதவீதம். எனினும், கிராமுக்கு, 50 ரூபாய் சலுகை உண்டு) * பத்திர வடிவில் வாங்கிக் கொள்ளலாம். டிமெட் வடிவிலும் வாங்கலாம். எனினும், டிமெட் கணக்கு கட்டாயம் இல்லை * வங்கிகள் மற்றும் இதர அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும், பி.எஸ்.இ., ஸ்டார் எம்.எப்., மூலம் வாங்கலாம் * ஒரு கிராம் முதல், 500 கிராம் வரை முதலீடு செய்யலாம் * தேவை எனில், முதிர்வு காலத்திற்கு பின், 3 ஆண்டுகள் நீட்டிக்கலாம்* வெளியிடப்படும் காலத்தில் வாங்க முடியும். பங்குச்சந்தை பரிவர்த்தனையிலும் வாங்கலாம்
தங்க இ.டி.எப்.,கள்
* தங்க இ.டி.எப்.,கள் மியூச்சுவல் பண்ட் வகையை சேர்ந்தவை. இவை தங்கத்தை அடிப்படையாக கொண்டவை. இவற்றை டிமெட் வடிவில் வாங்கலாம். பங்குச்சந்தையில் பரிவர்த்தனை செய்யலாம் * யூனிட்களாக வாங்கலாம் * இ.டி.எப்., மதிப்பு, நிகர சொத்து மதிப்பாக வெளியிடப்படுகிறது. ஒரு யூனிட் தங்கத்திற்கான செலவு அடிப்படையில் இது அமைகிறது. தங்க விலைக்கு ஏற்ப இது அமையும்* தங்க இ.டி.எப்.,களில் ஆண்டுக்கு ஒரு சதவீத செலவு விகித கட்டணம் உண்டு * மியூச்சுவல் பண்ட் நிறுவனங் களிடம் இருந்து, நேரடி யாக அல்லது வங்கிகள் உள்ளிட்ட வினியோக நிறுவனங்கள் மூலம், இணையம் வழியே வாங்கலாம் * பங்குச்சந்தையில் பட்டியலிப்பட்டு பரிவர்த்தனை செய்யப்படும் இவற்றை வாங்க, டிமெட் கணக்கு அவசியம் * பங்குச்சந்தை பரிவர்த்தனை நேரத்தில், எப்போது வேண்டுமானால் வாங்கலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|