பதிவு செய்த நாள்
24 அக்2016
11:52

சென்னை : தீபாவளிக்கு, 'ஆன்லைன்' வழியிலான பட்டாசு விற்பனை, சூடுபிடித்து உள்ளது.
தீபாவளிக்கு பட்டாசு வாங்க, மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள், இணையதளம் வழியே முன்பதிவு செய்வது,ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.இந்தஆண்டும்,ஆன்லைன் விற்பனை சூடுபிடித்து உள்ளது. போக்குவரத்து செலவு மற்றும் காலவிரயம் தவிர்க்கப்படுவதே இதற்கு காரணம். இது குறித்து, சிவகாசியை சேர்ந்த, தீபாவளி ஆன்லைன் பட்டாசு வியாபாரி எம்.சங்கரநாராயணன் கூறியதாவது:
ஆண்டுதோறும், ஆன்லைன் வழியே பட்டாசு விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மூன்று ஆண்டுகளாக, தீபாவளியின் போது, 20 சதவீதம் விற்பனை கூடியது. கடந்த ஆண்டு, எங்கள் இணைய தளத்தை,தினமும், 100 பேர் பார்த்தனர். தற்போது, இருமடங்காக அதிகரித்துள் ளது. சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக ஆர்டர்கள் வருகின்றன.
சென்னையில், கோயம்பேடு போன்ற பொதுவான இடத்திற்கு சரக்குகளை அனுப்பி, அங்கிருந்து, 'டெலிவரி' செய்யலாம். சிவகாசியில் உள்ள, 2,000 கடைகளில் பெரும்பாலானோர், ஆன்லைனில் விற்பனை செய்ய துவங்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல், சென்னையை சேர்ந்த, 'கிராக்கர் பேஸ்கட்' என்ற, சில்லரை வணிக நிறுவன இயக்குனர் செந்தில்குமார் கூறியதாவது: ஆன் லைனில் முன்பதிவு செய்தால், வீட்டிற்கு டெலிவரி தருகிறோம்; குறைந்த பட்சம், 3,000 ரூபாய்க்கு வாங்க வேண்டும். தற்போது, பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது. கடைசி நேரத்தில், பலர் ஆர்டர் செய்வதால், டெலிவரி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன், டெலி வரியை நிறுத்தினால் தான், தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும்; அது, பலருக்கு தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|