பதிவு செய்த நாள்
24 அக்2016
13:48

மஹாராஷ்டிராவில், ஆரஞ்சு பழ சீசன் துவங்கி உள்ளதால், தமிழகத்திற்கு வரத்து அதிகரித்து உள்ளது.மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், ஆரஞ்சு பழங்கள் அதிக அளவில் விளைகின்றன. ஆண்டுதோறும் செப்டம்பரில், ஆரஞ்சு பழ சீசன் துவங்கும். இந்தாண்டு, ஒரு மாதம் கழித்து ஆரஞ்சு பழ சீசன் துவங்கி உள்ளது.இதனால், தமிழகத்திற்கு, அவற்றின் வரத்து அதிகரித்து வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, தினமும், 10க்கும் மேற்பட்ட லாரிகளில், தற்போது வரத்து உள்ளது. வரும் நாட்களில், சீசன் களைகட்ட துவங்கினால், வரத்து மேலும் அதிகரிக்கும்.சென்னைக்கு வரும் ஆரஞ்சு பழங்கள், பல மாவட்டங்களுக்கும் செல்கின்றன. தற்போது, சென்னையில், 1 கிலோ ஆரஞ்சு பழம், மொத்த விலையில், 20 முதல், 25 ரூபாய் வரையும்; சில்லரையில், 35 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது. வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், விலை மேலும் சரியும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|