பதிவு செய்த நாள்
24 அக்2016
15:49

புதுடில்லி : இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் முன்னணியில் இருந்து வருகிறது. கேலக்சி நோட் 7 பிரச்னையால் சாம்சங் நிறுவனத்தின் விற்பனை மந்த நிலைக்கு சென்றுள்ளது.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் 3வது காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் எதிர்பார்த்ததை விட 58 சதவீதம் உயர்ந்தது. அதே சமயம் சாம்சங் நிறுவன பங்குகள் 35 சதவீதம் சரிந்தன. பண்டிகை காலத்தில் விற்பனை சரிந்துள்ளது சாம்சங் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
ஐபோன் 7 விற்பனை எதிர்பார்த்ததை விட அறிமுகம் செய்த முதல் வாரத்திலேயே இரண்டு மடங்காக அதிகரித்தது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது. இதனால் சாம்சங் நிறுவனம் தனது முதலிடத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தும் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக கேலக்சி எஸ்7 எட்ஜ் என்ற புதிய மாடல் போனை அறிமுகம் செய்து, அதன் விற்பனையை பெருக்கும் முயற்சியில் சாம்சங் தீவிரமாக இறங்கி உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|