பதிவு செய்த நாள்
24 அக்2016
17:36

மும்பை : டாடா குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மீண்டும் ரத்தன் டாடா தலைவராகியிருக்கிறார்.
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனம் டாடா. இந்த குழுமத்திற்கு உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் பலவிதமான தொழில்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனத்தின் தலைவராக கடந்த 1991-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை ரத்தன் டாடா பொறுப்பு வகித்தார். அதன்பின்னர் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விலகி கொள்ள, சைரஸ் மிஸ்திரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த நான்கு ஆண்டுகளாக இவர் தலைமை பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் அந்த குழுமத்தில் ஏற்பட்ட சில சிக்கல்களால் சைரஸ் மிஸ்திரிக்கு சிக்கல் உருவானதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று அவர் அந்த பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். சைரஸ்க்கு பதில் தற்காலிகமாக மீண்டும் ரத்தன் டாடாவே தலைவராக பொறுப்பு வகிக்க உள்ளார்.
புதிய தலைவரை நான்கு மாதங்களுக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்படி, புதிய தலைவரை ரத்தன் டாடா, ரோனென் சென், வேணு ஸ்ரீனிவாசன், அமித் சந்திரா ஆகியோர் அடங்கிய 4பேர் குழு தேர்வு செய்ய இருக்கிறார்கள். அதுவரை ரத்தன் டாடாவே தலைவர் பொறுப்பில் இருப்பார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|