பதிவு செய்த நாள்
24 அக்2016
23:06

இந்துார் : பதஞ்சலி நிறுவனம், ஜவுளித் துறையில் களமிறங்க முடிவு செய்துள்ளது.
யோகா குரு, பாபா ராம்தேவுக்கு சொந்தமானது பதஞ்சலி நிறுவனம். இந்நிறுவனம், ஆயுர்வேதம், மூலிகை, உணவுப் பொருட்கள் தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, பதஞ்சலி, ஜவுளி உற்பத்தியிலும் களமிறங்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து, பாபா ராம்தேவ் கூறியதாவது: இந்தியா, 25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்கிறது. இதில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதன் மதிப்பு, நான்கு லட்சம் கோடி ரூபாய். இதை தவிர்க்க, இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். பதஞ்சலி, ஜவுளி உற்பத்தியில் களமிறங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம், பாரம்பரிய ஆடைகளான, குர்தா, பைஜாமா போன்ற ஆடைகள் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம், பதஞ்சலி ஒட்டுமொத்த அளவில், 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|