பதிவு செய்த நாள்
24 அக்2016
23:07

புதுடில்லி : யுரேகா போர்ப்ஸ், 100 கோடி டாலர் வருவாய் ஈட்டும் நிறுவனமாகஉருவெடுக்க திட்டமிட்டு உள்ளது.
யுரேகா போர்ப்ஸ், தண்ணீர் சுத்திகரிப்பு மற்றும் காற்று சுத்திகரிப்பு சாதனங்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், தற்போது, ஐரோப்பா, வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளில், தொழிலை விரிவுபடுத்தி உள்ளது. இதன் மூலம், 2020ல், 100 கோடி டாலர் வருவாய் ஈட்டும் நிறுவனமாக உருவெடுக்க திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், தண்ணீர் மற்றும் காற்று சுத்திகரிப்பில், பல சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. மேலும், எங்கள் நிறுவனம், துணை நிறுவனமான லக்ஸ் இண்டர்நேஷனல் மூலம், 48 நாடுகளில், தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. வரும், 2020ல், 100 கோடி டாலர் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|