பதிவு செய்த நாள்
24 அக்2016
23:08

புதுடில்லி : அப்பல்லோ டயர்ஸ், ஹங்கேரி நாட்டில், டயர் தொழிற்சாலையை அமைத்து வருகிறது.
அப்பல்லோ டயர்ஸ், மோட்டார் வாகனங்களுக்கான டயர் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், 100 நாடுகளில், டயர்களை விற்பனை செய்கிறது. இந்நிலையில், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில், டயர் தொழிற்சாலை அமைக்கும் பணியை இந்நிறுவனம் துவக்கியுள்ளது. இதற்காக, 47.50 கோடி யூரோ முதலீடு செய்ய உள்ளது.
இது குறித்து, அப்பல்லோ டயர்ஸ் அதிகாரி அமிதாப் ஆர்யா கூறியதாவது:ஹங்கேரியில், ஆண்டுக்கு, 62 லட்சம் கார் மற்றும் வர்த்தக வாகனங்களில் பயன்படுத்தக் கூடிய டயர் உற்பத்தி செய்யப்படும். 2017ல் இருந்து, உற்பத்தி துவங்கும். அந்த ஆலை, ஹங்கேரியில் இருந்து, 100 கி.மீ., தொலைவில் அமைக்கப்படுகிறது. உற்பத்தியாகும் டயர்கள், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|