பதிவு செய்த நாள்
24 அக்2016
23:08

புதுடில்லி : முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சோதனை அடிப்படையில், சமையல் எரிவாயுவின் சில்லரை விற்பனையில் களமிறங்கியுள்ளது.
இந்நிறுவனம், குஜராத்தில் உள்ள அதன் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் உற்பத்தியாகும் சமையல் எரிவாயுவின் பெரும் பகுதியை, பொது துறையைச் சேர்ந்த, ஐ.ஓ.சி., உள்ளிட்ட மூன்று நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. குறிப்பிட்ட அளவு எரிவாயுவை, தனியார் நிறுவனங்களுக்கு மொத்தமாக விற்பனை செய்கிறது. இந்நிலையில், எரிவாயு நிறுவனங்கள், சில்லரை விற்பனையில் ஈடுபட, மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, ரிலையன்ஸ், சோதனை முறையில் சமையல் எரிவாயுவின் சில்லரை விற்பனையை துவக்கிஉள்ளது.
‘முதற்கட்டமாக, நான்கு கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை, நான்கு மாவட்டங்களில் வினியோகித்துள்ளோம். நுகர்வோர் கருத்துக்களை பரிசீலித்து, விற்பனையை விரிவுப்படுத்த முடிவு செய்துள்ளோம்’ என, ரிலையன்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|