பதிவு செய்த நாள்
24 அக்2016
23:10

புதுடில்லி : பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ கணினி நாசகாரர்களால் பங்குச்சந்தைகள் பாதிக்கப்படாமலிருக்க, அவற்றின் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளது.
சமீபத்தில், 32 லட்சம் வங்கி, ஏ.டி.எம்., கார்டுகளின் தகவல்கள், ‘ஹேக்கர்ஸ்’ எனப்படும், கணினி நாசகாரர்களால் திருடப்பட்டது அம்பலமாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த, ‘சைபர்’ தாக்குதலை தொடர்ந்து, பல வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு, ஏ.டி.எம்., கார்டு ரகசிய எண்ணை மாற்றுமாறு அறிவுறுத்தி உள்ளன. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஆறு லட்சம், ‘டெபிட்’ கார்டுகளை முடக்கி, புதிய கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், செபியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:செபியின் கீழ், பங்குச்சந்தைகள், தரகு நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதியங்கள் உட்பட, பல்வேறு முக்கிய நிதி அமைப்புகள் உள்ளன. இவற்றின் அன்றாட நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டால், அதன் தாக்கம் அனைத்து துறைகளிலும் எதிரொலிக்கும். எனவே, செபி, அதன் கணினி ஒருங்கிணைப்பை பலப்படுத்த, தலைமை தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க உள்ளது. அவர், சைபர் பாதுகாப்பை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வார். அதற்கான வேலைகள், ஏற்கனவே துவங்கி விட்டன.
இந்நிலையில், தற்போது, ஏ.டி.எம்., தகவல் திருட்டு வெளியானதை அடுத்து, நியமனப் பணியை விரைந்து முடிக்கவும், புதிய, வலுவான பாதுகாப்பு கொள்கையை உருவாக்கவும், செபி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முன்னேறிய நாடுகள் பின்பற்றும், மிகவும் பாதுகாப்பு நடைமுறைகளை அறிமுகப்படுத்தவும்; சர்வதேச அளவில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சைபர் பாதுகாப்பு வல்லுனர்களின் ஆலோசனைகளை பெற்று, அவற்றை செயல்படுத்தவும் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|