பதிவு செய்த நாள்
26 அக்2016
07:33

பீஜிங் : சீன அரசு பத்திரிகையான, ‘குளோபல் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள செய்தி: சீன நிறுவனங்கள், இந்தியாவில் பல்வேறு பொருட்களின் தயாரிப்பில் இறங்கி வருகின்றன. இதை, சீன அரசு எதிர்க்கவில்லை. தற்போது, இந்தியா தான், உலகளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. அதை பயன்படுத்தி சீன நிறுவனங்கள், இந்தியாவில் தொழில் துவங்குவதை, சீன அரசு வரவேற்கிறது.
ஆனால், இந்தியாவின் தொழில் துறை கட்டமைப்பு, சீனாவை போன்றதல்ல. அங்கு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக, தொழிற்சங்கங்கள் கொடி பிடிப்பது சகஜம். இதை, இந்தியாவில் தொழில் துவங்கச் செல்லும் சீன நிறுவனங்கள், போகப் போக புரிந்து கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சீனா, கம்யூனிஸ்ட் நாடாக உள்ள போதிலும், அங்கு அரசு சார்பில், ஒரே மத்திய தொழிற்சங்கம் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் ஜியோனி, லி எகோ உள்ளிட்ட பல நிறுவனங்கள், இந்தியாவில் மொபைல் போன் தயாரிப்பில் இறங்கியுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|