பதிவு செய்த நாள்
26 அக்2016
07:33

மும்பை : டாடா குழும நிறுவனங்களை உள்ளடக்கிய, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து, சைரஸ் மிஸ்திரி, நேற்று முன்தினம் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதையடுத்து, மீண்டும், டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள, ரத்தன் டாடா, நேற்று, டாடா குழும நிறுவனங்களின் மூத்த தலைவர்களை அழைத்து பேசினார்.
அப்போது, ரத்தன் டாடா கூறியதாவது: டாடா சன்ஸ் தலைமை தான் மாறியுள்ளது; அதுவும், தற்காலிகமாக தான். புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார். அதனால், அந்தந்த நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் உள்ளோர், தங்கள் பணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நடந்தவைகளை நினைக்காமல், இனி நடப்பவற்றில் கவனம் செலுத்த வேண்டும்; நிறுவன முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சைரஸ் மிஸ்திரி, பதவி நீக்கத்தை எதிர்த்து நேற்று, மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்வார் என, செய்தி வெளியானது. ஆனால், அதை, சைரஸ் மிஸ்திரி தரப்பு மறுத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|