பதிவு செய்த நாள்
26 அக்2016
07:34

மும்பை : நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.51 கோடி பொதிகளாக அதிகரிக்கும் என, மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது.
இது குறித்து, மத்திய ஜவுளி ஆணையர் கவிதா குப்தா கூறியதாவது:கடந்த, 2015 – 16ம் பருவத்தில், நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.38 கோடி பொதிகள் என்றளவில் இருந்தது. தற்போது, பருவமழை நன்கு உள்ளதால், 2016 – 2017 செப்., பருவத்தில், 3.51 கோடி பொதிகளாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.நடப்பாண்டில், பருத்தி சாகுபடி பரப்பளவு, 119 லட்சம் ஹெக்டரில் இருந்து, 105 லட்சம் ஹெக்டராக குறையும் என, தெரிகிறது. அதே சமயம், ஒரு ஹெக்டரில் விளையும் பருத்தியின் அளவு, 17.46 சதவீதம் உயர்ந்து, 483.79 கிலோவில் இருந்து, 568 கிலோவாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், தென் மாநிலங்களில் பருத்தி உற்பத்தி, 1.08 கோடி பொதிகளில் இருந்து, 94 லட்சம் பொதிகளாக குறைய வாய்ப்புள்ளது. ஏற்றுமதியும், 69 லட்சம் பொதிகளில் இருந்து, 50 லட்சம் பொதிகளாக குறையும் என, தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|