திவால் வாரியத்திற்கு புதிய விதிமுறைகள்திவால் வாரியத்திற்கு புதிய விதிமுறைகள் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.79 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.79 ...
சுல­ப­மாக தொழில் துவக்கும் வச­தியில் 16 மாநி­லங்கள் 80 சத­வீத முன்­னேற்றம்: உலக வங்கி – டி.ஐ.பி.பி., மதிப்­பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2016
07:35

புது­டில்லி : இந்­தி­யாவில், சுல­ப­மாக தொழில் துவங்­கு­வ­தற்­கான வச­தி­களை ஏற்­ப­டுத்தி கொடுப்­பதில், 16 மாநி­லங்கள், 80 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மாக முன்­னேற்றம் கண்­டுள்­ளன.
இந்­திய தொழில் கொள்கை மேம்­பாட்டு துறை­யான, டி.ஐ.பி.பி., – உலக வங்­கி­யுடன் இணைந்து, இந்­தி­யாவில், சுல­ப­மாக வர்த்­தகம் புரிய வச­தி­யுள்ள மாநி­லங்­களின் பட்­டி­யலை தயா­ரித்து உள்­ளது. எளி­மை­யான தொழில் துவங்கும் நடை­முறை, விரை­வான மின் இணைப்பு, சிறந்த அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி கள் உள்­ளிட்ட, 340 அம்­சங்­களின் அடிப்­ப­டையில், மாநி­லங் கள் தேர்வு செய்­யப்­பட்­டன.
‘‘அதில், 16 மாநி­லங்கள், சுல­ப­மாக தொழில் துவக்கும் வச­தியில், 80 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மாக முன்­னேற்றம் கண்டு, பட்­டி­யலில் இடம் பிடித்­துள்­ளன,’’ என, டி.ஐ.பி.பி., செயலர், ரமேஷ் அபிஷேக் தெரி­வித்துள்ளார்.
அவர், மேலும் கூறி­ய­தா­வது: மத்­திய அரசு, அன்­னிய நேரடி முத­லீ­டு­களை ஈர்க்­கவும், உள்­நாட்டில் தயா­ரிப்புத் துறையை மேம்­ப­டுத்­தவும், ‘இந்­தி­யாவில் தயா­ரிப்போம்’ திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது. இத்­திட்டம், மாநி­லங்கள் இடையே, கடும் போட்­டியை ஏற்­ப­டுத்தி உள்­ளது. அவை, அன்­னிய நேரடி முத­லீ­டு­களை ஈர்க்க, பல்­வேறு கட்­டுப்­பா­டு­களை தளர்த்தி, சுல­ப­மாக தொழில் துவக்­கு­வ­தற்­கான வச­தி­களை ஏற்­ப­டுத்­து­வதில், தீவிரம் காட்டி வரு­கின்­றன. சரக்கு போக்­கு­வ­ரத்து உள்­ளிட்ட அடிப்­படை கட்­ட­மைப்பு பணி­களை முடுக்கி விட்­டுள்­ளன. இதனால், அம்­மா­நி­லங்­களின் பொரு­ளா­தாரம் வளர்ச்சி கண்டு வரு­கி­றது.
மாநி­லங்கள் இடை­யி­லான இந்த ஆரோக்­கி­ய­மான போட்­டியை, மேலும் ஊக்­கு­விக்கும் நோக்கில், வளர்ச்­சிக்கு தடை­யாக உள்ள, அடிப்­படை கட்­ட­மைப்பு வசதி குறை­பா­டுகள், சிக்­க­லான வரி நடை­முறை போன்ற, சில முக்­கிய பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண, டி.ஐ.ஐ.பி., முயன்று வரு­கி­றது. மாநி­லங்கள் விதிக்கும் பல்­வேறு வரிகள், தயா­ரிப்பு நிறு­வ­னங்­களை பாதிக்­கின்­றன. இதனால், தயா­ரிப்பு பொருட்கள் விலை உய­ரு­கின்­றன.
இந்த பிரச்­னைக்கு, அடுத்­தாண்டு அறி­மு­க­மாக உள்ள, சரக்கு மற்றும் சேவை வரி முடிவு கட்டும். மாநி­லங்கள் இடை­யி­லான, சரக்கு போக்­கு­வ­ரத்து சுல­ப­மா­கவும், விரை­வா­கவும் நடை­பெறும்; குறித்த காலத்தில், சரக்­குகள் சென்று சேரும். இதனால், சரக்­குகள் தேங்­கு­வது குறைந்து, பரா­ம­ரிப்பு செலவு கணி­ச­மாக மிச்­ச­மாகும். மேலும், மாநி­லத்­திற்கு மாநிலம் மாறு­படும் தயா­ரிப்பு செல­வுகள் சீராகும்; நாடு முழு­வதும், பொருட்­க­ளுக்கு ஒரே விலை நிலவும். இவ்­வாறு அவர் கூறினார்.
ஜப்­பா­னுக்கு அழைப்பு :கடந்த, 2015 அக்., நில­வ­ரப்­படி, இந்­தி­யாவில், ஜப்­பானைச் சேர்ந்த, 1,229 நிறு­வ­னங்கள் தொழிற்­சா­லை­களை அமைத்­துள்­ளன. மேலும், அதிக முத­லீ­டு­களை ஈர்க்கும் நோக்கில், இந்­திய வர்த்­தகக் கூட்­ட­மைப்பு, ஜப்­பானில், ‘பிக்கி இந்­தியா பிளஸ்’ என்ற அலு­வ­ல­கத்தை திறக்க உள்­ளது. இது, இந்­தி­யாவில் தொழில் துவங்க விரும்பும் ஜப்பான் நிறு­வ­னங்­க­ளுக்கு, தேவை­யான அனைத்து உத­வி­க­ளையும் வழங்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)