பதிவு செய்த நாள்
26 அக்2016
10:29

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 201.20 புள்ளிகள் சரிந்து 27,890.22-ஆகவும், நிப்டி 61.65 புள்ளிகள் சரிந்து 8,629.65-ஆகவும் இருந்தன.
டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டதன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் நேற்று சரிவை சந்தித்த நிலையில் இன்று உலகளவில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிவை சந்தித்து வருகிறது. இதன்காரணமாகவும், அக்டோபர் மாதத்திற்கான டிரவேட்டிவ் செக்மண்ட் மீதான எதிர்பார்ப்பாலும் பங்குச்சந்தைகள் சரிவுடன் இருப்பதாக சந்தை வல்லுநர் தெரிவித்துள்ளனர். மேலும் ஆசிய பங்குச்சந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங், ஜப்பானின் நிக்கி, ஷாங்காய் பங்குச்சந்தைகள் உட்பட ஆசிய பங்குச்சந்தைகளும் சரிவுடன் இருப்பது இந்திய பங்குச்சந்தைகள் சரிய காரணமாக அமைந்ததாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|