பதிவு செய்த நாள்
27 அக்2016
07:36
புதுடில்லி : உலக வங்கி, 2017ம் ஆண்டுக்கான, சுலபமாக தொழில் துவங்கும் வசதியுள்ள, 190 நாடுகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா, நடப்பாண்டை போன்றே, 130வது இடத்தில் மாற்றமின்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: இந்தியாவில் சுலபமாக தொழில் துவங்க, மத்திய அரசும், மாநில அரசுகளும், பல்வேறு சீர்திருத்த திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. சில திட்டங்கள், செயல்வடிவம் பெற, சற்றுதாமதமாகலாம். குறிப்பாக, வணிக வழக்குகளை விசாரிக்க, தனி நீதிமன்றங்கள் அமைக்கும் பணிகள், உலக வங்கியின் ஆய்வில் இடம் பெறவில்லை. இது போன்ற காரணங்களால், உலக வங்கி பட்டியலில், இந்தியா மாற்றமின்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, ஏமாற்றம் அளிக்கிறது. எனினும், இன்னும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|