பதிவு செய்த நாள்
28 அக்2016
04:03

புதுடில்லி:பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனர் மற்றும் தலைவரு மான, சுனில் பார்தி மிட்டல், சர்வதேச மொபைல் போன் சேவை மற்றும் தயாரிப்பு நிறுவனங்களின் அமைப்பான, ஜி.எஸ்.எம்.ஏ.,வின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த, 2003ல் துவக்கப்பட்ட இதன் நிர்வாக குழுவில், முதன் முறையாக, இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் தலைவராக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. டில்லியில் நேற்று நடந்த, ஜி.எஸ்.எம்.ஏ., இயக்குனர் குழு கூட்டத்தில், மிட்டல் மற்றும் புதிய இயக்குனர்கள், 26 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக, ஜி.எஸ்.எம்.ஏ., தலைவராக பணியாற்றி வரும், ஜான் பிரெட்ரிக் பாக்சாஸ், இந்தாண்டு இறுதியில் பதவி விலகுகிறார். இதையடுத்து, ௨௦௧௭ ஜன., 1ல், ஜி.எஸ்.எம்.ஏ., தலைவராக, சுனில் பார்தி மிட்டல் பதவி ஏற்பார். அவர், இரண்டு ஆண்டுகள் பதவி வகிப்பார் என, ஜி.எஸ்.எம்.ஏ., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|