பதிவு செய்த நாள்
28 அக்2016
04:08

பெங்களூரு;‘நம் நாட்டில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் எண்ணிக்கை, 2020ல், 10,500 ஆக உயரும்’ என, ‘நாஸ்காம்’ அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதன் விபரம்::நாட்டில், வலைதளம் மூலம் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை, ஆண்டுதோறும், 10 – 12 சதவீதம் அதிகரித்து வருகிறது; இது, வரும் ஆண்டுகளில், குறிப்பிடத்தக்க அளவிற்கு உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்தாண்டு மட்டும், இதுவரை, 1,400க்கும் அதிகமான, புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. டிசம்பர் இறுதிக்குள், நாட்டில் செயல்பாட்டில் உள்ள, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, 4,750க்கும் அதிகமாக உயரும் என, கணிக்கப்பட்டு உள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில், ஸ்டார்ட் நிறுவனங்கள், இரு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்து, 10,500 ஆக அதிகரிக்கும்.
அதிகளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ள நகரங்களில், பெங்களூரு, தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், டில்லியை உள்ளடக்கிய தலைநகர் பிராந்தியம், மும்பை, ஐதராபாத், புனே, சென்னை ஆகிய நகரங்கள் உள்ளன. ஆரோக்கியம், நிதி, கல்வி போன்ற துறைகளில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், முதலீடு செய்யவே, முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர்.
இந்த வகையில், 650 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 400 கோடி டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட்டு உள்ளது. தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், நம் நாட்டுக்கு புதிய அடையாளத்தை அளித்து, அதன் தொழில்நுட்ப ஆற்றலை உலகறியச் செய்து வருகின்றன. தொழில்நுட்பமும், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆற்றலும் ஒருங்கே கொண்ட, நம் நாட்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், உலக நாடுகளின் கவனத்தை தொடர்ந்து ஈர்க்கும். இந்தாண்டு, 350க்கும் அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இளைஞர்களால் துவக்கப்பட்டு உள்ளன.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் புதிய உத்திகளை ஆராய்ந்து, அவற்றை வர்த்தக ரீதியில் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான, உதவி மையங்களை, அரசும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அமைத்து வருகின்றன. இத்தகைய உதவி மையங்களின் எண்ணிக்கை, இந்தாண்டு, 40 சதவீதம் அதிகரித்து, 140க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்திய ஸ்டார்ட் அப் துறை, வளர்ச்சியுடன் மிக வேகமான மாற்றங்களை சந்தித்து வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில், நுகர்வோர் சார்ந்த வணிகத்திலும், அடுத்து, நிதிச் சேவைகளிலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகம் உள்ளன இத்துறையில் வேலைவாய்ப்பு, 75 ஆயிரத்தில் இருந்து, 2020ல், 3 லட்சமாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கையில், அமெ ரிக்கா, சீனா,பிரிட்டன் நாடுகளை அடுத்து, இந்தியா உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|