பதிவு செய்த நாள்
30 அக்2016
03:35
நியூயார்க்;சர்வதேச நிறுவனமான ஜெனித், மொபைல்போனில் இணைய பயன்பாடு குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:உலகளவில், ஸ்மார்ட்போன், டேப்லெட் சாதனங்கள் வாயிலாக வலைதளங்களை பார்வையிடுவது அதிகரித்து வருகிறது.இந்தாண்டு, உலகளவிலான இணைய பயன்பாட்டில், மொபைல்போன் வாயிலாக,வலைதளங்களை பார்வையிடுவது, 71 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது; இது, 2017ல், 75 சதவீதமாக உயரும்.
சர்வதேச அளவில், இணையதள விளம்பரங்கள் வருவாயில், மொபைல்போன்களின் பங்களிப்பு, 60 சதவீதமாக உள்ளது.இந்தாண்டு, மொபைல் போன் வாயிலான விளம்பரங்களுக்கு, 7,100 கோடி டாலர் செலவிடப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.வரும், 2018ல், மொபைல்போன்கள் வாயிலான விளம்பரச் செலவினம், 13,400 கோடி டாலராக உயரும்.இது, பத்திரிகை, பருவ இதழ்கள், திரைப்படங்கள் மற்றும் வெளியிட விளம்பரங்களுக்கான செலவை விட அதிகம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|