ஓராண்டில்...நிறு­வ­னங்­களின் அன்­னிய வர்த்­தக கடன்246 கோடி டால­ராக குறைந்­ததுஓராண்டில்...நிறு­வ­னங்­களின் அன்­னிய வர்த்­தக கடன்246 கோடி டால­ராக குறைந்­தது ... ஜெய்ப்பூர் ஆலையில் உற்­பத்தி போஷ் நிறு­வனம் துவக்­கி­யது ஜெய்ப்பூர் ஆலையில் உற்­பத்தி போஷ் நிறு­வனம் துவக்­கி­யது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வாழ்க்கை என்­பது அவ­சர நிலை அல்ல!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2016
23:48

பிரச்­னை­களை எதிர்­கொள்ளும் போது மிகை­யாக நடந்து கொண்டு நமக்கு நாமே அவ­சர நிலையை உரு­வாக்கி கொள்­கிறோம் என்­கிறார் ரிச்சர்ட் கார்ல்சன். ‘டோண்ட் ஸ்வெட் தி ஸ்மால் ஸ்டப்’ எனும் புத்­த­கத்தில், சின்ன சின்ன விஷ­யங்­களை நினைத்து கவலைப்­ப­டாமல் எல்­லா­வற்­றையும், புதிய கண்­ணோட்­டத்தில் பார்க்­கவும் வழி­காட்­டு­கிறார்.
நாம் சின்ன விஷ­யங்­களை நினைத்து கவலைப் ­பட பழ­கி­யி­ருக்­கிறோம். பெரிய சித்­தி­ரத்தை பார்க்­கத்­த­வறி விடு­கிறோம். எதிர்­ம­றை­யான விஷ­யங்­களில் கவனம் செலுத்­து­கிறோம். நம் வாழ்க்­கையை ஏதோ அவ­சர நிலை போல வாழ்­கிறோம். நாம் பிஸி­யாக இருப்­பது போல காட்­டிக்­கொண்டு, பிரச்­னை­களை தீர்க்க போரா­டிக் ­கொண்டு, ஆனால், உண்­மையில் அவற்றை அதி­க­மாக்கி கொண்­டி­ருக்­கிறோம். ஏனெனில் எல்­லாமே நமக்கு மலைப்­பாகத் தெரி­கி­றது.இதற்கு மாறாக வாழ்க்­கையை எளி­தாக்கி கொள்ள வழி இருக்­கி­றது. அந்த மாற்று வழி, எதிர்­வினை புரி­வதை விட்­டு­விட்டும், புதிய புரிதல் கொண்ட பழக்­கங்­களை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தாகும். பெரும்­பா­லான நேரங்­களில் யோசித்துப் பார்த்தால் பெரிய விஷ­ய­மாக இல்­லாத சின்ன விஷ­யங்­க­ளுக்­காக நாம் அதிகம் அலட்­டிக் ­கொள்­கிறோம். போக்­கு­வ­ரத்து நெரிசல் கண்டு கோபம் கொள்­கிறோம்.
இது பற்றி நாள் முழு­வதும் பேசும் பழக்கம் கொண்­டி­ருக்­கிறோம். இப்­படி பல சின்ன சின்ன விஷ­யங்கள் இருக்­கின்­றன. வரி­சையில் காத்து இ­ருப்­பது முதல், அதிக வேலை பளுவை சுமப்­பது வரை சின்ன விஷ­யங்கள் குறித்து அதிகம் கவ­லைப்­ப­டாமல் இருக்க கற்­றுக்­கொண்டால் வாழ்க்கை நன்­றாக இருக்கும். இதை இலக்­காக கொள்ளும் போது, மென்­மை­யா­கவும், கரு­ணை ­யா­கவும் இருப்­ப­தற்­கான ஆற்­றலை பெறு­வீர்கள். நம்மில் பலர் வாழ்க்­கையை ஒரு பெரிய அவ­சர நிலை­யாக கருதி ஓடிக்­கொண்டே இருப்­ப­தற்­கான காரணம், அமை­தி­யா­ன­வர்­களாகவும் அன்­பா­ன­வர்­க­ளா­கவும் மாறி­விட்டால் நாம் இலக்­கு­களை அடை­வதில் இருந்து தவ­றி­விடுவோம் என்ற அச்­ச­மாகும். ஆனால், உண்­மையில் இதற்கு எதிர் கருத்தே நிதர்­சனம் என புரிந்து கொண்டால் அச்­சத்தை வெல்­லலாம்.
காலையில் சீக்­கிரம் எழுந்து கொண்டால் பல­வே­லை­களை செய்­வ­தற்­கான பொன்­னான நேரம் கிடைக்கும். மன அமை­திக்­காக தியானம் செய்­யலாம். நமக்குள் அமை­தி­யாக உணரும் தன்மை கொண்­டி­ருந்­தாலும் வாழ்க்­கையில் சாதிக்­கலாம். மன அமை­தியை உணர எளிய வழிகள் பல இருக்­கின்­றன. மற்­ற­வர்கள் பேசும் போது குறுக்­கி­டாமல் கவ­னி­யுங்கள். எதிர்­காலம் பற்­றிய கற்­பனை கவ­லை­களை விட்­டு­விட்டு இப்­போ­தைய தரு­ணத்தை அனு­ப­வி­யுங்கள்.வெற்று கணத்தை கண்டு அஞ்ச வேண்டாம். செய்­வ­தற்கு ஒன்றும் செய்­யாமல் இருப்­பதில் தவ­றில்லை. இதன் மூலம் மனதில் தெளிவை பெறலாம். மற்­ற­வர்கள் உங்கள் செயல்­களை ஏற்­றுக்­கொள்­ளாமல் விமர்­சிக்கும் போது அதனால் உணர்ச்சி வசப்­ப­டாமல், இது இயல்­பா­னது தான் என எடுத்­துக்­கொள்­ளுங்கள்.
மகிழ்ச்­சி­யாக உணரும் தரு­ணங்­களில் நன்றி உணர்­வுடன் இருங்கள். மோச­மாக உணரும் போது அமை­தி­யாக இருங்கள். நீங்கள் என்ன நினைக்­கி­றீர்கள் என்­பதில் கவனம் செலுத்­து­வதன் மூலம் உங்கள் எண்­ணங்­க­ளையும் மாற்­றிக்­கொள்ள முடியும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)