ஓராண்டில்...நிறு­வ­னங்­களின் அன்­னிய வர்த்­தக கடன்246 கோடி டால­ராக குறைந்­ததுஓராண்டில்...நிறு­வ­னங்­களின் அன்­னிய வர்த்­தக கடன்246 கோடி டால­ராக குறைந்­தது ... ஜெய்ப்பூர் ஆலையில் உற்­பத்தி போஷ் நிறு­வனம் துவக்­கி­யது ஜெய்ப்பூர் ஆலையில் உற்­பத்தி போஷ் நிறு­வனம் துவக்­கி­யது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பி.பி.எப்., கணக்கை மாற்றுவது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2016
23:50

பி.பி.எப்., என குறிப்­பி­டப்­படும், ‘பொது சேம­நல நிதி’ நீண்ட கால நோக்­கி­லான முத­லீட்டு வாய்ப்­பாக கரு­தப்­ப­டு­கி­றது. ஒரு­வரின் முத­லீட்டு உத்­திக்கு நிலை­யான தன்­மையை வழங்­கு­வ­தோடு நீண்ட கால இலக்­கு­களை அடை­யவும் இது உத­வு­கி­றது.
வரு­மான வரி சட்­டத்தின், 80 ‘சி’ பிரிவின் கீழ், பி.பி.எப்., முத­லீட்­டிற்கு வரிச்­சலுகை கோரலாம் என்­ப­தோடு, முதிர்வு காலத்தில் பெறும் தொகையும் வரிச்­ச­லுகை கொண்­டது. ஓய்வு கால திட்­ட­மி­ட­லிலும் இது முக்­கிய பங்கு வகிக்­கி­றது. சில ஆண்­டுகள் முன்­வரை அஞ்சல் அலு­வ­ல­கங்கள் மற்றும் ஒரு சில வங்­கி­களில் மட்­டுமே பி.பி.எப்., கணக்கை துவக்கும் வசதி இருந்­தது. ஆனால், அண்மை காலத்தில் மேலும் பல பொதுத்­துறை மற்றும் தனியார் வங்­கிகள் இந்த வச­தியை அளிக்கத் துவங்­கி­யுள்­ளன. எனவே, ஏதேனும் கார­ணத்­திற்­காக பி.பி.எப்., கணக்கை நீங்கள் விரும்­பிய வங்­கிக்கு மாற்­றிக்­கொள்­ளலாம். சில வங்­கிகள் இணையம் மூலம் பணம் செலுத்தும் வச­தியை அளிப்­பதும் கணக்கை பரா­ம­ரிக்க எளி­தாக அமையும்.
விண்­ணப்பம்பி.பி.எப்., கணக்கை மாற்ற தற்­போது கணக்கு வைத்­துள்ள அஞ்சல் அலு­வ­லகம் அல்­லது வங்­கியில் மாற்­றத்­திற்­கான கோரிக்­கையை சமர்­ப்பிக்க வேண்டும். அஞ்சல் அலு­வ­லகம் எனில், இதற்­காக எஸ்.பி.-10 (பி) விண்­ணப்ப படி­வத்தை பூர்த்தி செய்து சமர்­ப்பிக்க வேண்டும். கணக்­கு­தா­ர­ரிடம் இருந்து கோரிக்கை வந்­ததும், வங்கி அல்­லது அஞ்சல் அலு­வ­லகம் அதை பரி­சீ­லிக்கும். இதன் பிறகு கணக்கின் மூல ஆவ­ணங்கள், கணக்கு துவக்­கிய படிவம், நாமி­னேஷன் படிவம், மாதிரி கையெ­ழுத்து உள்­ளிட்ட ஆவ­ணங்கள் மற்றும் பாஸ்புக் ஆகி­ய­வற்றை, கணக்கு மாற்றப்­பட உள்ள வங்கி அல்­லது அஞ்சல் அலு­வ­ல­கத்­திற்கு அனுப்பி வைக்கும். கணக்கில் உள்ள எஞ்­சிய தொகைக்­கான காசோலை அல்­லது டி.டி.,யையும் அளிக்கும்.
புதிய கணக்குபழைய கணக்கை முடித்­துக்­கொண்­ட­தற்­கான சான்­றி­த­ழுடன், புதிய கணக்கு துவங்­கு­வ­தற்­கான படிவம் (பார்ம் ஏ), நாமி­னேஷன் படிவம் ஆகி­ய­வற்றை மூல பாஸ்­புக்­குடன் சமர்ப்­பித்து கணக்கு துவக்­கலாம். புதி­தாக கே.ஒய்.சி., ஆவ­ணத்­தையும் சமர்ப்­பிக்க வேண்டும். புதிய கணக்­கிற்கு புதிய எண் வழங்­கப்­பட்­டாலும், தொடரும் கணக்­கா­கவே கரு­தப்­படும். எனவே, கணக்கு தொடர்­பான அனைத்து வச­தி­க­ளையும் பெற முடியும். பணி­மா­றுதல் உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் வேறு இடங்­க­ளுக்கு செல்­ப­வர்கள் தங்கள் இடத்தில் கணக்கை தொடரும் வகை­யிலும் இந்த மாற்­றத்தை பயன்­ப­டுத்திக் கொள்ளலாம். இது போன்ற கார­ணத்­தால் கணக்கை தொட­ராமல் விட்­ட­வர்கள், குறைந்த பட்ச டெபா­சிட்­டாக, 500 ரூபாய் மற்றும் விடு­பட்ட ஆண்டு ஒவ்­வொன்­றுக்கும் அப­ரா­த­மாக, 50 ரூபாய் செலுத்தி கணக்கை விரும்­பிய இடத்தில் உள்ள வங்­கிக்கு மாற்­றிக்­கொண்டு தொடர்ச்­சி­யான பலனை பெறலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)