பதிவு செய்த நாள்
31 அக்2016
23:26
புதுடில்லி : பிரபல, டி.டி.கே., குழுமத்தைச் சேர்ந்த, டி.டி.கே., பிரெஸ்டீஜ் நிறுவனம், சமையலறை சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஏப்., மாதத்தில், இந்நிறுவனம், பிரிட்டனைச் சேர்ந்த, ஹோர்வுட் ஹோம்வேர்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, ஐரோப்பாவில் சந்தையை விரிவுபடுத்தவும் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், பிரிட்டன் வெளியேறிவிட்டதால், ஐரோப்பிய சந்தை குறித்த புதிய திட்டங்களை தீட்டுவதில் இறங்கி இருக்கிறது, பிரெஸ்டீஜ் நிறுவனம்.
இது குறித்து பேசிய, இந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர், பிரிட்டன் வெளியேறிய பின், ஐரோப்பிய சந்தை தனி சந்தையாக இருக்குமா என்பது தெரியவில்லை. அது, எப்படி அமைகிறது என்பதை பொறுத்து, அதற்கேற்றவாறு திட்டங்களை வகுக்க இருக்கிறோம். ஐரோப்பாவில், பிரிட்டனை தவிர்த்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இரு பெரிய பொருளாதாரங்கள் இருக்கின்றன. அந்த சந்தையிலும், எங்கள் நிறுவனம் ஆர்வமாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|