பதிவு செய்த நாள்
31 அக்2016
23:29
ஐதராபாத் : ஹெரிடேஜ் புட்ஸ், ரிலையன்ஸ் ரீடெயிலின், பால் விற்பனை பிரிவை வாங்க உள்ளது.
ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனம், பல்பொருள் அங்காடி, பால் விற்பனை உள்ளிட்ட வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. ரிலையன்ஸ் ரீடெயில், 10 மாநிலங்களில் உள்ள, 2,400 கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளிடம் இருந்து, தினமும், 2.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. அவற்றை பதப்படுத்தி, சில்லரை அங்காடிகளில் விற்பனை செய்கிறது.
கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், ரிலையன்ஸ் ரீடெய்ல்சுக்கு, பால் விற்பனை பிரிவு மூலம், 553 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இந்நிலையில், ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனம், ரிலையன்ஸ் ரீடெயிலின் பால் விற்பனை பிரிவை கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த கையகப்படுத்தும் பணி முடிந்தாலும், ரிலையன்ஸ் ரீடெய்ல் ஹெரிடேஜ் தயாரிப்புகளை, தன் சில்லரை விற்பனை மையங்கள் மூலமாக விற்பனை செய்யும் என தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|