வலை­தளம் மூலம் வீட்­டிற்கே வரும் ‘ஐஸ் கிரீம்’ வலை­தளம் மூலம் வீட்­டிற்கே வரும் ‘ஐஸ் கிரீம்’ ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.67 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.67 ...
பன்­னாட்டு நிறு­வ­னங்­களை விட அதிக வருவாய் ஈட்­டிய இந்­திய நிறு­வ­னங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2016
23:31

புது­டில்லி : இந்­திய நுகர்­பொருள் தயா­ரிப்பு நிறு­வ­னங்கள், கடந்த, 2015 – 16ம் நிதி­யாண்டில், எம்.என்.சி., எனப்­படும், பன்­னாட்டு நிறு­வ­னங்­களை விட, அதிக வருவாய் ஈட்­டி­யுள்­ளன என, ‘அசோசெம் – டெக் ஸ்டாடி’ ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
அதன் விபரம்:இந்­தி­யாவில் செயல்­படும், இந்­துஸ்தான் லீவர், புராக்டர் அண்ட் கேம்பிள் ஹைஜின் அண்ட் ஹெல்த்கேர் உள்­ளிட்ட எட்டு பன்­னாட்டு நிறு­வ­னங்­களும், ஏழு, இந்­திய நிறு­வ­னங்­களும், ஆய்­வுக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டன. அதில், கடந்த நிதி­யாண்டில், சர்­வ­தேச மற்றும் உள்­நாட்டு நிறு­வ­னங்­களின் மொத்த வருவாய், முறையே, 943 கோடி டாலர் மற்றும் 1,106 கோடி டால­ராக உள்­ளது தெரிய வந்­துள்­ளது. சிகரெட், பிஸ்கட், நுாடுல்ஸ் உள்­ளிட்ட பொருட்­களை விற்­பனை செய்யும், உள்­நாட்டைச் சேர்ந்த, ஐ.டி.சி., நிறு­வ­னத்தின் நிகர லாபம், 25.48 சத­வீதம் உயர்ந்து, 151 கோடி டால­ராக அதி­க­ரித்து உள்­ளது; மொத்த வருவாய், 595 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது.
வியக்கத்தக்க வளர்ச்சி :இந்­தி­யாவில், ‘ஏரியல், டைட், ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ்’ உள்­ளிட்ட பிராண்­டு­களில், நுகர்வோர் பொருட்­களை விற்கும், அமெ­ரிக்­காவின் புராக்டர் அண்ட் கேம்பிள் நிறு­வ­னத்தின் நிகர லாபம், 17.03 சத­வீதம் உயர்ந்து, 6.50 கோடி டால­ரா­கவும், வருவாய், 38 கோடி டால­ரா­கவும் உள்­ளது. பன்­னாட்டு நிறு­வ­னங்­களில், அதி­க­ளவில் வருவாய் ஈட்­டி­யதில், ‘ரின், வீல், லைப்பாய்’ உள்­ளிட்­ட­வற்றின் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரும், இந்­துஸ்தான் லீவர் முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. இந்­நி­று­வ­னத்தின் மொத்த வருவாய், முந்­தைய நிதி­யாண்டை விட, 3.84 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 492 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. எனினும், இதன் நிகர லாபம், 12.76 சத­வீத அள­விற்கே அதி­க­ரித்து, 63 கோடி டால­ராக உள்­ளது.
இந்­திய நிறு­வ­னங்­களில், பிரிட்­டா­னியா, வருவாய் மற்றும் நிகர லாபத்தில், இரண்­டா­வது இடத்தை பிடித்­துள்­ளது. அடுத்த இடங்­களில், டாபர் இந்­தியா, கோத்ரெஜ் கன்ஸ்­யூமர் புராடெக்ட்ஸ், மாரிக்கோ, அமுல், பதஞ்­சலி ஆயுர்­வேதா ஆகிய நிறு­வ­னங்கள் உள்­ளன. ஆய்­வுக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட உள்­நாட்டு நிறு­வ­னங்­களில், பாபா ராம்­தேவின், பதஞ்­சலி ஆயுர்­வேதா நிறு­வனம், இதர நிறு­வ­னங்­களை விட, வரு­வாயில் வியக்­கத்­தக்க வளர்ச்­சியை கண்­டுள்­ளது.
சிறிய நகரங்களிலும் :கடந்த நிதி­யாண்டில், இந்­நி­று­வ­னத்தின் மொத்த வருவாய், 146.31 சத­வீதம் அதி­க­ரித்து, 77 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. இது, முந்­தைய நிதி­யாண்டில், 31.20 கோடி டால­ராக இருந்­தது. இந்­திய நிறு­வ­னங்கள், அவற்றின் ஒருங்­கி­ணைப்பு நட­வ­டிக்­கைகள் மூலம், செல­வி­னங்­களை குறைத்து, வருவாய் அதி­க­ரிப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றன. முக்­கிய நக­ரங்­களில் மட்­டு­மின்றி, சிறிய நக­ரங்கள், புற­ந­க­ரங்கள், கிரா­மப்­பு­றங்­களில், நுகர்­வோரின் தேவை­களை பூர்த்தி செய்யும் வகையில், வர்த்­தக செயல்­பா­டு­களை அமைத்து முன்­னேறி வரு­கின்­றன. இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)