பதிவு செய்த நாள்
02 நவ2016
02:43

புதுடில்லி : ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டாவின் துணை நிறுவனம், ஹோண்டா கார்ஸ் இந்தியா. இந்நிறுவனத்திற்கு, ராஜஸ்தானில் உள்ள தபுகாராவில் வாகன உதிரிபாகங்கள் தொழிற்சாலை உள்ளது.
2014 பிப்ரவரி முதல் இயங்கி வரும் இத்தொழிற்சாலையில், வாகன இன்ஜின் உதிரிபாகங்கள், இருசக்கர வாகனங்களுக்கான வார்பட சாதனங்கள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் வாகன உதிரிபாகங்கள், ஜப்பான் உள்ளிட்ட, 15 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம், உதிரிபாகங்கள் ஏற்றுமதி மூலம், 1,031 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது.
நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி வருவாயை அதிகரிக்க திட்டமிட்டு, அதற்கான உற்பத்தியை இந்நிறுவனம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், 1,675 கோடி ரூபாயாக உயரும் என, ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|