ரிலை­யன்­சுக்கு ரூ.6,700 கோடி அப­ராதம்?ரிலை­யன்­சுக்கு ரூ.6,700 கோடி அப­ராதம்? ... இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சரிந்தால் வாணி கோலாவுக்கு இழப்பு அதிகம்! இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சரிந்தால் வாணி கோலாவுக்கு இழப்பு அதிகம்! ...
வேக­மெ­டுக்­குது தயா­ரிப்பு துறை 2 ஆண்­டுகள் காணாத வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2016
02:49

புது­டில்லி : ‘இந்­திய தயா­ரிப்பு துறை, அக்­டோ­பரில், 22 மாதங்­களில் காணாத வளர்ச்­சியை கண்­டுள்­ளது’ என, ஐ.எஸ்.எஸ்., மார்கிட் நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்­டு உள்­ளது.
அதன் விபரம்: கடந்த அக்­டோ­பரில், உள்­நாட்டு தயா­ரிப்பு துறையின் வளர்ச்­சியை கணக்­கிடும், ‘நிக்கி மார்கிட் பி.எம்.ஐ.,’ குறி­யீட்டு எண், 54.4 புள்­ளி­க­ளாக உயர்ந்­துள்­ளது; இது, செப்­டம்­பரில், 52.1 புள்­ளி­க­ளாக இருந்­தது. தயா­ரிப்பு துறை சீரிய வளர்ச்சிப் பாதையில் நடை­போ­டு­வதை, பி.எம்.ஐ., குறி­யீடு சுட்டிக் காட்­டு­கி­றது.
மதிப்­பீட்டு மாதத்தில், தயா­ரிப்பு துறையின் உற்­பத்தி, 46 மாதங்­களில் இல்­லாத வகையில் வளர்ச்சி கண்­டுள்­ளது. அது­போல, 22 மாதங்­களில் காணாத அள­விற்கு, தயா­ரிப்பு துறையில் புதிய, ‘ஆர்­டர்’­­களின் வளர்ச்சி விகிதம் உள்­ளது. தொடர்ந்து, 10வது மாத­மாக, தயா­ரிப்பு துறையின் உற்­பத்தி அதி­க­ரித்­துள்­ளது; நான்கு ஆண்­டு­ களில் இல்­லாத வகையில் வளர்ச்சி வேகம் காணப்­பட்­டது. இதற்கு, புதிய ஆர்­டர்கள் அதிக அள­விற்கு குவிந்­ததும், அதற்­கேற்ப, தேவை அதி­க­ரித்­ததும் முக்­கிய கார­ணங்­க­ளாகும்.
கடந்த செப்­டம்­பரில் அமைத்துக் கொண்ட வலு­வான அடித்­த­ளமும், தயா­ரிப்பு துறையின் வேக­மான வளர்ச்­சிக்கு துணை புரிந்­துள்­ளது. அக்­டோ­பரில், தயா­ரிப்பு துறைக்கு கிடைத்த ஆர்­டர்­களில், கணி­ச­மான அளவு, வெளி­நா­டு­களில் இருந்து வந்­துள்­ளன. அதே­ச­மயம், வெளி­நா­டு­களில் இருந்து கிடைத்த புதிய ஆர்­டர்­களின் வளர்ச்சி விகிதம், மூன்று மாதங்­களில் இல்­லாத அள­விற்கு குறைந்­துள்­ளது.
ரிசர்வ் வங்­கியின் வட்டி குறைப்பு நட­வ­டிக்­கைகள், தயா­ரிப்பு துறையை ஊக்­கு­விக்கும் வகையில் உள்­ளது. எனினும், அது, பண­வீக்க உயர்­வுக்கும், பொருட்கள் விலை அதி­க­ரிப்­பிற்கும் வழி வகுக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்­நிலை, இந்­தாண்டு இறுதி வரை தொடரும் என, தெரி­கி­றது. ரிசர்வ் வங்கி, அக்., 4ல், வங்­கி­க­ளுக்கு வழங்கும் குறு­கிய கால கடன்­க­ளுக்­கான, ‘ரெப்போ’ வட்டி விகி­தத்தை, 0.25 சத­வீதம் குறைத்து, 6.25 சத­வீ­த­மாக நிர்­ண­யித்­தது.
கடந்த, 2015, ஜன­வரி முதல் ரெப்போ வட்டி, 1.75 சத­வீதம் குறைக்­கப்­பட்­டுள்­ளது. ரிசர்வ் வங்­கியின் அடுத்த நிதிக் கொள்கை, டிசம்பர், 7ல் வெளி­யாக உள்­ளது. பண­வீக்கம், பொரு­ளா­தார வளர்ச்சி உள்­ளிட்ட அம்­சங்­களின் அடிப்­ப­டையில், ரிசர்வ் வங்­கியின் நிதிக் கொள்கை அறி­விப்பு இருக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.
மத்­திய அரசு ஊக்குவிப்புமத்­திய அரசின், ‘இந்­தி­யாவில் தயா­ரிப்போம், டிஜிட்டல் இந்­தியா, ஸ்டார்ட் அப் இந்­தியா’ உள்­ளிட்ட திட்­டங்கள், தயா­ரிப்பு துறையின் வளர்ச்­சிக்கு துணை புரிந்து வரு­கின்­றன. பல்­வேறு துறை­களில், அன்­னிய முத­லீட்­டிற்­கான கட்­டுப்­பா­டுகள் தளர்த்­தப்­பட்­டதும், சுல­ப­மாக தொழில் துவங்க, உரிமம் பெறும் விதி­மு­றைகள் எளி­மை­யாக்­கப்­பட்­டதும், தயா­ரிப்பு துறைக்கு ஊக்­க­ம­ளித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)