பதிவு செய்த நாள்
03 நவ2016
23:19

புதுடில்லி : அலுமினியம் தொழிலுக்கு, வரிச்சலுகை அளிப்பது குறித்து, மத்திய அரசு, விரைவில் முடிவு எடுக்க உள்ளது.
இந்தியாவில், ஆண்டுக்கு, 40 லட்சம் டன் அலுமினியம் உற்பத்தி செய்யும் திறனுடைய ஆலைகள் உள்ளன. உள்நாட்டில், அலுமினியம் பயன்பாடு ஆண்டுக்கு, 30 லட்சம் டன் என்றளவில் உள்ளது. மொத்த அலுமினிய தேவையில், 50 சதவீதம், இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. குறிப்பாக, சீனாவில் இருந்து, அதிகளவில் அலுமினியம் இறக்குமதியாகிறது.
கடந்த, 2011 – 15 வரை, இந்தியாவின் அலுமினியம் இறக்குமதி, 159 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில், அலுமினிய இறக்குமதியால் உள்நாட்டு அலுமினிய துறை பாதிப்பதை தடுக்கும் நோக்கில், அத்துறைக்கு வரிச் சலுகைகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ‘‘இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்,’’ என, மத்திய சுரங்க துறை செயலர் லாவேந்தர் குமார் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|