இரு­சக்­கர வாக­னங்கள் துறை விறு விறு வளர்ச்சிஇரு­சக்­கர வாக­னங்கள் துறை விறு விறு வளர்ச்சி ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.66.72 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.66.72 ...
இந்­தி­யாவில் அதிகம் விரும்பும் ‘பிராண்டு’ தென்­கொ­ரி­யாவின் எல்.ஜி., முத­லிடம்: டி.ஆர்.ஏ., ஆய்­வ­றிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2016
23:25

புது­டில்லி : ‘இந்­தி­யாவில், அதி­க­மானோர் விரும்பும், ‘பிராண்­டு’­களில், தென்­கொ­ரி­யாவின், எல்.ஜி., முத­லி­டத்தை பிடித்­துள்­ளது’ என, டி.ஆர்.ஏ., எனப்­படும், டிரஸ்ட் ரீசர்ச் அட்­வை­சரி நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்டுள்­ளது.
அதன் விபரம்:இந்­திய மக்கள், பிராண்டு பொருட்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிப்­பது அதி­க­ரித்து வரு­கி­றது. இந்த வகையில், நுகர்வோர் சாத­னங்கள் துறையில், மக்­களின் விருப்­ப­மான பிராண்டு குறித்து, 16 நக­ரங்­களில், ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. இந்த ஆய்வில், 3,000த்திற்கும் அதி­க­மான நுகர்­வோர்கள் பங்­கேற்று, தங்கள் கருத்­துக்­களை தெரி­வித்­தனர். அவற்றின் அடிப்­ப­டையில், இந்­தாண்டு, இந்­தி­யாவின் மிகச்­சி­றந்த கவர்ச்­சி­க­ர­மான, நுகர்­வோரின் விருப்­ப­மான பிராண்­டாக, எல்.ஜி., தேர்வு செய்­யப்­பட்டு உள்­ளது.
‘ஏசி, ரெப்­ரி­ஜி­ரேட்டர், டிவி, மொபைல் போன்’ என, பல வகை­யான சாத­னங்­களின் தயா­ரிப்பில், எல்.ஜி., நிறு­வனம் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்­நி­று­வனம், அதன் சாத­னங்­களில், காலத்­திற்­கேற்ப பல்­வேறு புது­மை­களை புகுத்தி, நுகர்­வோரின் நன்­ம­திப்பை சம்­பா­தித்து வரு­கி­றது. கடந்த, 2013ல், வெளி­யி­டப்­பட்ட பட்­டி­யலில், எல்.ஜி., நான்­கா­வது இடத்தில் இருந்­தது. அடுத்த ஆண்­டு­களில் படிப்­ப­டி­யாக முன்­னேறி, தற்­போது, முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. இந்த பட்­டி­யலில், ஜப்­பானைச் சேர்ந்த, சோனி நிறு­வனம், இரண்­டா­வது இடத்தை பிடித்­துள்­ளது. தென்­கொ­ரி­யாவின் சாம்சங் மொபைல்ஸ், மூன்­றா­வது இடத்தில் உள்­ளது; ஜப்­பானைச் சேர்ந்த, ஹோண்டா நிறு­வனம், நான்­கா­வது இடத்தை பிடித்­துள்­ளது.
கடந்த, 2014ல், இப்­பட்­டி­யலில், ஐந்­தா­வது இடத்தில் இருந்த டாடா பிராண்டு, 2015ல், நான்­கா­வது இடத்­திற்கு முன்­னே­றி­இ­ருந்­தது. இந்­தாண்டு, இந்த பிராண்டு, ஏழா­வது இடத்தில் உள்­ளது. டாடா சன்ஸ் நிறு­வ­னத்தின் தலைவர் பத­வியில் இருந்து, சைரஸ் மிஸ்­திரி வெளி­யே­று­வ­தற்கு முன், இந்த ஆய்­வ­றிக்கை தயா­ரிக்­கப்­பட்­டது என்­பது, குறிப்­பி­டத்­தக்­கது.ட்டு பயன்­பாட்டு சாத­னங்­களை தயா­ரிக்கும் சாம்சங் நிறு­வனம், பிராண்டு பட்­டி­யலில், ஐந்­தா­வது இடத்தை பிடித்­துள்­ளது. நுகர்­வோரை ஈர்க்கும் முன்­னணி பிராண்­டு­களில், முதல் ஐந்து இடங்­களை, பன்­னாட்டு நிறு­வ­னங்கள் கைப்­பற்றி உள்­ளன.
உள்­நாட்டைச் சேர்ந்த, பஜாஜ் நிறு­வனம், ஆறா­வது இடத்தை பிடித்­துள்­ளது; மாருதி சுசூகி பிராண்டு, எட்­டா­வது இடத்தில் உள்­ளது. சுனில் மிட்டல் தலை­மை­யி­லான, பார்தி ஏர்டெல் நிறு­வ­னத்தின், ‘ஏர்டெல்’ பிராண்டு, இப்­பட்­டி­யலில், ஒன்­ப­தா­வது இடத்தை பிடித்­துள்­ளது; பின்­லாந்தைச் சேர்ந்த, நோக்­கியா நிறு­வனம், 10வது இடத்தில் உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.
பதஞ்­சலி முன்­னேற்றம்நுகர்­பொருள் பிரிவில், பாபா ராம்­தேவின் பதஞ்­சலி பிராண்டு, இந்­துஸ்தான் யூனி­லீ­வரை, இரண்­டா­வது இடத்­திற்கு தள்ளி விட்டு, முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. அடுத்த இடங்­களில், நிர்மா, இமாமி, புராக்டர் அண்ட் கேம்பிள் பிராண்­டுகள் உள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)