பதிவு செய்த நாள்
11 நவ2016
06:04
புதுடில்லி : கடந்த அக்., மாதம், உள்நாட்டில், வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக, இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்து உள்ளது.
அதன்படி, பயணிகள் வாகன விற்பனை, அக்., மாதத்தில், 2.80 லட்சமாக அதிகரித்து உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 2.68 லட்சமாக குறைந்திருந்தது. இதே காலத்தில், கார்கள் விற்பனை, 1.94 லட்சத்தில் இருந்து, 1.95 லட்சமாக உயர்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் விற்பனை, 7.37 சதவீதம் உயர்ந்து, 10.65 லட்சத்தில் இருந்து, 11.44 லட்சமாக அதிகரித்து உள்ளது. இருசக்கர வாகனங்கள் விற்பனை, 8.72 சதவீதம் உயர்ந்து, 16.56 லட்சத்தில் இருந்து, 18 லட்சமாக அதிகரித்து உள்ளது. வர்த்தக வாகனங்கள் விற்பனை, 11.90 சதவீதம் உயர்ந்து, 65,569 ஆக உயர்ந்துள்ளது. கடந்த அக்., மாதம், ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனை, 8.14 சதவீதம் அதிகரித்து, 20.35 லட்சத்தில் இருந்து, 22.01 லட்சமாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|